news

News December 31, 2024

நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை

image

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2020இல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட பின்னர், காமராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

News December 31, 2024

கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா

image

வேதம், பாளையத்தம்மன் உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையில் கொச்சியில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டனர்.

News December 31, 2024

7.3 மடங்கு அதிகமான முதல்வர்களின் வருமானம்!

image

இந்தியாவின் பணக்கார CM ஆக AP CM சந்திரபாபு நாயுடு ₹931 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். ₹332 கோடியுடன் அருணாச்சல் CM 2ஆவதாகவும், ₹8 கோடியுடன் TN CM ஸ்டாலின் 14வது இடத்திலும் உள்ளனர். ஏழை CM பட்டியலில் ₹15 லட்சத்துடன் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளார். 2023-24 நிதியாண்டில் தனிநபர் நிகர தேசிய வருமானம் தோராயமாக ₹1,85,854 ஆக உள்ள நிலையில், ​​ஒரு CMஇன் சராசரி சுய வருமானம் ₹13,64,310 ஆக உள்ளது.

News December 31, 2024

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

image

2025ஆம் ஆண்டிற்கான UPSC தேசிய பாதுகாப்பு & கடற்படை அகாடமி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய முப்படையில் காலியாக உள்ள 406 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு. வயது வரம்பு: 15-18. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & உடற்தகுதி. கூடுதல் தகவல்களுக்கு https://upsconline.gov.in/ சென்று பார்க்கவும்.

News December 31, 2024

தமிழிசைக்கு புதிய பொறுப்பு!

image

அந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவசர பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, BJP தேசிய தலைவரும், அமைச்சருமான ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். தேசியத் தலைவரை மாற்றுவதற்கு முன் அனைத்து மாநில பொறுப்பாளர்களையும் நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

News December 31, 2024

சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நேற்றும் இதேபோல அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் போராடிய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

News December 31, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

தமிழக அரசின் பொதுப்பணி துறை, தென் மண்டலத்தின் தொழிற்பழகுநர் வாரியத்தின் ஒத்துழைப்புடன் தொழிற்பயிற்சி வழங்கவுள்ளது. ஓராண்டு தொழிற்பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 760. கல்வித்தகுதி: UG Degree, BE (Civil, ECE, Arch), Diploma. வயது வரம்பு: 18-28. உதவித்தொகை: ₹8,000 – ₹9,000. கூடுதல் தகவல்களுக்கு nats.education.gov.in சென்று பார்க்கவும்.

News December 31, 2024

தமிழகத்தில் கூடுதல் ஒரு நாள் விடுமுறை?

image

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜனவரி 14 (செவ்வாய்), ஜனவரி 15 (புதன்), ஜனவரி 16, (வியாழன்) ஆகிய நாள்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்தால் 6 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை, அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

News December 31, 2024

வரிச்சுமையை குறைக்க STT வரி நீக்கப்படுமா?

image

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், வர்த்தக அமைப்புகள் தங்களது எதிர்பார்ப்புகளை மத்திய நிதியமைச்சகத்தின் ஏ டீம்மிடம் சமர்ப்பித்துள்ளன. 12.5% LTCG வரியின் தாக்கத்தைக் குறைக்க, பங்குச்சந்தை பத்திர பரிவர்த்தனை வரியை (STT) ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மீதான வரிச்சுமை குறையுமெனக் கூறப்படுகிறது.

News December 31, 2024

ரூ. 1,000 கோடி நஷ்டத்தை சந்தித்த கோலிவுட்

image

ஒரு காலத்தில் தரமான படங்களின் மூலம் இந்திய சினிமாவை கட்டி ஆண்ட தமிழ் சினிமா காலப்போக்கில் அதன் பொலிவை இழந்து வருகிறது. அதற்கு உதாரணமாக இந்தாண்டு திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 223 படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதன்மூலம் தமிழ் சினிமாவில் ரூ. 1,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை 2025இல் மாறுமா என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!