India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 70 பாரா மிலிட்டரி கம்பெனிகளும், 15,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ஆங்காங்கே ரோந்துப் பணியிலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
முதல் T20 போட்டியில் ஷமி விளையாடவில்லை. அவர் 2வது போட்டியிலாவது களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வந்து விட்டது. சென்னையில் தொடங்கும் போட்டிக்கு முன்பாக ஷமி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், முழங்காலில் பேண்டேஜ் இருப்பது, அவர் விளையாடுவதில் சந்தேகம் எழுப்புகிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பெற்றுள்ள ஷமியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தை மாத சனிக்கிழமையில் அனுமனை வழிபடுவது கூடுதல் நன்மைகள் கொடுக்கும் என்பது ஐதீகம். சனியால் உங்களுக்கு தொல்லைகள் இருக்கும் பட்சத்தில், அதனை நீக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டு. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று, 27 வெற்றிலையை மாலையாக அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அனுமனிடம் வையுங்கள். சனி தொல்லையால் தவிப்பவர்களுக்கு நல்வழியை அனுமன் காட்டுவார். SHARE IT.
நாட்டின் 76ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் R.N.ரவியும் கொடியேற்றவுள்ளனர். பின்னர், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்படவுள்ளது. குடியரசு தினத்தை கொண்டாட மாணவர்கள் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
<<15251023>>மம்ஸ்<<>> (mumps) எனப்படும் பொன்னுக்கு வீங்கி நோய், Paramyxoviridae மூலம் ஏற்படுகிறது. இது காற்றில் எளிதாகவும் வேகமாகவும் பரவக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இடது (அ) வலது (அ) இருபுறமும் காதுகளுக்குக் கீழே பெரிய வீக்கம் தென்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும். இதைக் குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து கிடையாது. இது தானாகவே சீராகும் நோய் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திரைத்துறையில் வயது ஒரு பிரச்னை இல்லையெனவும், ஹீரோக்களின் வயதைப் பற்றி யாரும் கண்டு கொள்வது இல்லையென்றும் கூறினார். 50 வயதைக் கடந்த பின்னும் அற்புதமான வாழ்க்கை வாழலாம் எனக் கூறிய மனிஷா, எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று ஹாஸ்பிட்டலில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். நேற்று காலை 7.15 மணிக்கு சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு வந்த அவர், 9.30 மணிக்கு வெளியேறினார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டதாக ஹாஸ்பிட்டல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, ஹாஸ்பிட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
TNஇல் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி(Mumps) நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டில் 61 பேர், 2022-23இல் 129 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023-24இல் 8 மடங்கு அதிகமாகி 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர்காலத்தில் பரவும் இந்த நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. கன்னத்தில் வீக்கம், அதீத காய்ச்சல் இருந்தால் அலட்சியம் வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகின் டாப் ஃபுட்பால் கிளப்களில் ஒன்றான இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், தமிழ்நாட்டில் ஃபுட்பால் பயிற்சி மையத்தை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு பிரதிநிதிகளிடம் அந்த அணியின் நிர்வாகிகள் இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை போலவே ஃபுட்பாலுக்கும் நம் ஊரில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $624 பில்லியன் சரிந்துள்ளது. ஜனவரி 17ஆம் தேதி முடிந்த வாரத்தின் கணக்கெடுப்பின்படி, அது $1.8 பில்லியனாக குறைந்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு $1.06 பில்லியன் அதிகரித்து, $68.94 பில்லியனாக உயர்ந்துள்ளது. SDR பொறுத்தமட்டில், $1 பில்லியன் உயர்ந்து $17.78 பில்லியனாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.