India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டு வெளியான முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. அதேநேரம், சின்ன நடிகர்களின் படங்கள் வசூலை குவித்தன. இந்த சூழ்நிலையில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘தக் லைஃப், விஜய்யின் கடைசி படமான ‘Thalapathy69, அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘Retro’ ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில் எந்த படத்திற்கு நீங்க வெயிட்டிங் என்று கமெண்ட் பண்ணுங்க.
டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று ரிஷப் பண்ட் அவுட்டானது முட்டாள்தனம் என்று பாக். EX வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அந்த விக்கெட்தான் ஒட்டுமொத்த போட்டியையும் மாற்றியதாகவும், கடவுள் கொடுத்த மூளையை பண்ட் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையால் அமைச்சர் பொன்முடி பதவியை இழக்கும் நிலை உருவானது முதல் நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சி, பொதுக்குழு மேடையில் ராமதாஸ், அன்புமணி சண்டை என பல்வேறு அரசியல் திருப்பங்களை 2024ஆம் ஆண்டு நமக்குக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டில் நீங்கள் மறக்க முடியாத அரசியல் சம்பவம் என்ன? உங்களைக் கவர்ந்த தலைவர் யார் என கமெண்ட்டில் சொல்லுங்க..
தேர்வர்களின் நலன் கருதி, TNPSC தொகுதி IA மற்றும் குரூப் 4 பணிகளின் தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வுத் திட்டம் https://tnpsc.gov.in/tamil/scheme.html, முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் https://tnpsc.gov.in/tamil/syllabus ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.
தங்கம் விலை சவரனுக்கு கடந்த ஓராண்டில் ரூ.9,600 அதிகரித்துள்ளது. 1 கிராம் ஆபரணத் தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி ரூ.5,910ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,280ஆகவும் இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்து இன்று 1 கிராம் விலை ரூ.7,110ஆகவும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 56,880ஆகவும் உள்ளது. அதாவது, கடந்த ஓரே ஆண்டில் 1 கிராம் ரூ.1,200ம், ஒரு சவரன் ரூ.9,600ம் அதிகரித்துள்ளது.
மணிக்கு 450 km வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. CR 450 புல்லட் ரயில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் ரயிலானது பல்வேறு சோதனை நிலைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்தாண்டு இந்தியா விளையாட்டில் சில முக்கியமான வெற்றிகளை பெற்றுள்ளது. இந்திய ஆண்கள் அணி டி20 உலகக்கோப்பையை வென்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள், பாரா ஒலிம்பிக்கில் 29 பதக்கங்கள் வென்றது. மறுபுறம், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குகேஷ் அணியும், ஹரிகா அணியும் தங்கம் வென்றது. தற்காப்பு கலைஞரான பூஜா தோமர் யுஎஃப்சியை வென்றார், ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கேப்பையை வென்றது.
குமரி கண்ணாடி பாலத்திற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசாணை மட்டுமே போடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, படுத்து உறங்கினால் திட்டம் நிறைவேறி விடுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, ADMK ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதாகவும், தங்களின் முன்னெடுப்பே கண்ணாடி பாலம் அமைய காரணம் எனவும் இபிஎஸ் கூறியிருந்தார்.
2023 -24ம் ஆண்டுக்கான அபராதத்துடன் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் அவகாசம் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், பயனாளர்களின் வேண்டுகோளை ஏற்று, கால அவகாசத்தை மேலும் 15 நாள் வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்பதால் விரைவாக ITR-ஐ தாக்கல் செய்யவும்.
இன்னும் சில மணி நேரங்களில் 2025ஆம் ஆண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இப்போது, சோசியல் மீடியாக்களில் New Year ஸ்டேட்டஸ், போஸ்ட்டுகள், மீம்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 2024இல் உங்களுக்கு நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட்ல சொல்லுங்க..
Sorry, no posts matched your criteria.