news

News January 1, 2025

சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு

image

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான (ஜன.1 முதல் மார்ச் 31ம் தேதி வரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.

News January 1, 2025

தினம் ஒரு பொன்மொழி!

image

✦மனிதனின் பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை; அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் இருக்கிறது. ✦பெண் அழுதுகொண்டிருக்கும் மாளிகையைவிட அவள் சிரித்துக்கொண்டிருக்கும் குடிசை மேலானது. ✦நாம் அனைவரும் சிறைக்கைதிகள்தான் சிலர் சிறைக்கம்பிகளோடு, சிலர் கம்பிகள் இல்லாமலேயே இருக்கிறோம். ✦இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்
– கலீல் ஜிப்ரான்

News January 1, 2025

ஆட்டோ டிரைவரான கிராஃபிக் டிசைனர்..

image

மும்பையைச் சேர்ந்த கமலேஷ் காந்தேகர் Graphics Design துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அதில், மேனேஜர் நிலை வரை சென்ற அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மனம் சோர்ந்த அவர், கடைசியில் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். ஒருவருக்கு கீழ் உழைப்பதை விட, இப்படி உழைத்தால் சுயமரியாதை, பணம் இரண்டும் கிடைக்கும் எனக்குறிப்பிட்டு linkedinல் அவர் பதிவிட்டது வைரலாகியுள்ளது.

News January 1, 2025

REWIND 2024: கவனம் ஈர்த்த வில்லன் நடிகர்கள்!

image

திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக எதிர்மறை கதாநாயகன் இருந்தால்தான் திரைக்கதை சுவாரஸ்யமாக அமையும். அப்படி 2024ல் வெளியான படங்களில் கோட் படத்தில் ஜீவன் கதாப்பாத்திரத்தில் விஜய் தனது நடிப்பால் வில்லத்தனத்தில் தெறிக்கவிட்டிருப்பார். மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப் கவனம் பெற்றார். விடுதலை 2ல் சேத்தன் தனது நடிப்பால் மிரட்டியிருப்பார். 2024ல் உங்களை மிரட்டிய வில்லன் கதாபாத்திரம் எது? CMT பண்ணுங்க.

News January 1, 2025

ஹேங்கோவர் ஆகிட்டிங்களா? இதைச் செய்யுங்க!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வளவு குடிக்கிறோம் என்ற அளவு தெரியாமல், அதிகமாக குடித்துவிட்டு பலர் ஹேங்கோவர் ஆகியிருப்பர். தலைவலி, குமட்டல், அஜீரணம், சோம்பல், வயிற்றுவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதுபோல ஹேங்கோவர் ஆனவர்கள் ஏலக்காய், இஞ்சி டீ குடித்தால் மனம் ரிலாக்ஸ் ஆகும். எலுமிச்சை சாறுடன், மோர் கலந்து சாப்பிட்டால் குமட்டல் நிற்கும். அதிக தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும்.

News January 1, 2025

தைவான் ஒன்றிணைவதை தடுக்க முடியாது: ஜி ஜின்பிங்

image

தைவான் மீண்டும் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார். தைவானில் உள்ள மக்களும் சீன மக்களும் ஒரே குடும்பம் என்றார். தங்கள் பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது எனவும், தேசிய மறு ஒருங்கிணைப்பை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தைவான் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி வரும் சீனா, அதனை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

News January 1, 2025

‘நிதிஷ்குமார்’ இந்தியாவில் உதயமான நட்சத்திரம்: கிளார்க்

image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமாரை AUS முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் காணப்படும் நட்சத்திரம் நிதிஷ் என்றும், அவரால் பேட்டிங் விளையாட முடியும், பந்து வீச முடியும். பீல்டிங் செய்ய முடிகிறது. பேட்டிங் வரிசையில் அவருக்கு முன்னுரிமை வேண்டுமென கேட்டுகொண்டார். 21 வயதிலேயே, AUS பந்துவீச்சாளர்களை அச்சமின்றி எதிர்கொண்ட அவர், மேதை என்றும் புகழ்ந்துள்ளார்.

News January 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 135 ▶குறள்: அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. ▶பொருள்: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

News January 1, 2025

புத்தாண்டில் நீங்க எடுத்த தீர்மானங்கள் என்ன?

image

இனிமையான ஆண்டாக 2025ஐ மாற்றிட வேண்டுமென நினைப்போர் புத்தாண்டுக்கு புதிய தீர்மானங்களை எடுத்து வருகின்றனர். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது, திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செலவு செய்வது, ஜிம்மிற்கு செல்வது, புத்தகங்கள் வாசிப்பது, உடல் நலனுக்காக 8 மணி நேரம் தூங்குவது, சுற்றுலா செல்வது உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர். நீங்க என்ன மாதிரியான தீர்மானம் எடுத்தீங்க? CMT பண்ணுங்க.

News January 1, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

2025 புத்தாண்டின் முதல்நாளான இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!