India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் பிறந்த தின நிகழ்ச்சி அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த ஏராளமான எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் UBT கட்சி உடையக்கூடும் என தகவல் பரவி வருகிறது. ஏற்கெனவே ஏக்நாத் சிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் விலகி சிவசேனாவை கைப்பற்றினர். அவர்களோடு இவர்கள் சேரக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது.
கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதேபோல், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை சோபனா சந்திரசேகர் ஆகியோருக்கும் பத்மபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் மத்திய அரசு பத்மபூஷண் விருதை அறிவித்துள்ளது.
சனி பகவான் பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால் 3 ராசிகள் பணமும், அதிர்ஷ்டமும் கொட்டப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ரிஷபம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகள்தான் அவை. இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இதுவரை இருந்த பண சிக்கல் முழுமையாக தீரப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் உண்டு.
இந்தியாவில் மனிதர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10,000 அரியவகை சினார் மரங்களுக்கும் ஆதார் அடையாளம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் பார் கோடு உள்ளது. அதை ஸ்கேன் செய்தால், மரம் இருக்கும் இடம், மரத்தின் உயரம் உள்ளிட்ட தகவல் இருக்கும். அரிய மரங்களான அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக இது கூறப்படுகிறது.
வருமான வரிக்கணக்கை பொறுத்தவரை, தற்போது கணவன்- மனைவி இருவரும் தனித்தனியே தாக்கல் செய்கின்றனர். இதனால், இருவரில் ஒருவர் அதிக வருமானம் ஈட்டினாலே, அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. மாறாக, இருவரும் இணைந்து ஒரே கூட்டுக்கணக்காக தாக்கல் செய்யும் முறையை பட்ஜெட்டில் கொண்டுவர, மத்திய அரசுக்கு ICAI அமைப்பு முன்மொழிந்துள்ளது. இந்த முறை ஏற்கப்பட்டால், வரிச்சுமை குறையும். அரசு இதை ஏற்குமா?
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் போட்ட பதிவு, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மொழியை கற்க விரும்பாத வட இந்தியர்கள், அண்டை மாநிலத்தவர்களுக்கு பெங்களூரு மூடப்பட்டுவிட்டது எனவும், மாநிலத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் மதிக்க தெரியாதவர்களுக்கு பெங்களூரு வேண்டாமே எனவும் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
<<15255688>>ஆளுநர் ரவி <<>>தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சில ஆண்டுகள் முன்பு வரை முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், இன்று தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும், நாட்டிலேயே அதிக தற்கொலை நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், முற்காலத்தில் அறிவு, திறன்களின் ஆதாரமாக இந்தியா இருந்ததாகவும், தொடர் முயற்சிகளால் காலனித்துவ மனநிலை மாறி வருவதாகவும் கூறியுள்ளார். அரசியலமைப்பு நம்மை குடும்பமாக இணைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், புது திருப்பமாக மேலும் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மும்பை வீட்டில் இரவில் சயிப் அலிகான் இருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். இதுதாெடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த விஜய் தாஸ் என்பவரை மும்பை போலீஸ் கைது செய்தது. விசாரணையில் கத்தியை வாங்கிய இடம் உள்ளிட்ட தகவலை வெளியிடாததால் சந்தேகம் அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் கற்கள் நிறைந்து இருந்த தரிசு மலையை, தற்போது பச்சையம் கொழிக்கும் பசுமையான காடாக மாற்றியுள்ளார் ஷங்கர் லால். ம.பியில் உள்ள இந்த காட்டில், காஷ்மீர் குங்குமப்பூ முதல் இத்தாலியின் ஆலிவ் வரை 40,000 மரங்கள் உள்ளன. 2016ல் தொடங்கி 8 ஆண்டுகளில் ஷங்கர் இதை சாதித்துள்ளார். மக்கள் இந்த வனத்தை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கும் அவர், மேலும் 10,000 மரங்கள் நடுவதை தனது இலக்காகக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.