India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புது வருஷம் தொடங்கியாச்சு. இரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் பார்ட்டிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பலவிதமாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்த முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே.
இந்த புத்தாண்டில் நிகழும் சனி, குரு பெயர்ச்சி பலன்களின் அடிப்படையில், * மீனம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை பெற்று பணவரவு அதிகரிக்கும் சூழல் உண்டு * சிம்மம்: காதல் கைகூடும். பணம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும் *துலாம்: வாழ்க்கை துணையால் பெருமை கிட்டும். வேலை – வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். சொத்துகளை வாங்கும் நிலை உருவாகும்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும், டெஸ்ட், ODI போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆஸி. டெஸ்ட் தொடரில் அவர் ரன் குவிக்க திணறி வருவதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் தொடரின் முடிவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு அனைவருக்கும் செழிப்பைக் கொடுக்கட்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில், இந்தியாவின் நிலையான வளர்ச்சியை உருவாக்க நாம் அனைவரும் உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், 2025ஆம் ஆண்டு, அளவில்லாத மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை நாட்டு மக்களுக்குக் கொடுக்கட்டும் என PM மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை RBI இன்று முதல் அமல்படுத்தவுள்ளது. அதன் விளைவாக 3 வகையான வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்பட உள்ளன. அதாவது, 2 ஆண்டுகள் (அ) அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத கணக்குகள், செயல்படாத வங்கிக்கணக்குகள், பூஜ்ய பேலன்ஸ் கணக்குகள் மூடப்படும். தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என சோதித்துக்கொள்வது நல்லது.
புற்றீசல் போல் உருவாகும் சில App நமக்கு பெரும் ஆபத்தை தருகின்றன. கொடைக்கானலில் 13வது சிறுமி, முன் பின் தெரியாதவர்களுடன் Omegle ஆப்பில் வீடியோ காலில் அரட்டை அடித்த போது, விளையாட்டாக ‘ஐ லவ் யூ’ சொன்னதை ரெக்கார்டு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மிரட்டியுள்ளனர். தனிப்படை அமைத்து ஹரியானா சென்ற TN போலீசார், தினேஷ் என்பவரை தட்டித் தூக்கி அவருக்கு ஜெயில் பாடம் எடுக்கின்றனர். உஷாரா இருங்க மக்களே..
புத்தாண்டு பிறப்பையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் என்றும், கை விட மாட்டான் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் என்றும், ஆனா கை விட்டுடுவான் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வாழ்த்தில் சிலேடையாக யாரையோ சாடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள சப்த சிவத்தலங்களில் முதன்மையானது ஆதி கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 சிறப்புகளையும் பெற்ற இத்தலத்தில்தான் காமதேனு தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மலை, காடு, ஆறு, தீர்த்தம், நகரம், கோயில் எனும் ஆறு மங்கல அம்சங்கள் பொருந்திய இங்கு சென்று ஈசனை வணங்கினால் குறையா செல்வம் கிட்டும் என்பது ஐதீகம்.
நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், சென்னையில் நேற்று தற்கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்ராஜ் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார். மகள் சாவுக்கு காரணமான ஹேம்ராஜ் விடுதலையானதும், அவருக்கு தண்டனை கிடைக்காததாலும் காமராஜ் வருத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளார். இதனாலேயே தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
கட்டுமான வேலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்களில் சிமெண்டும் ஒன்று. அதன் விலை அண்மையில், தென் மாநில சந்தைகள் தவிர்த்து பிற சந்தைகளில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் சிமெண்ட் விலையை நாடு முழுவதும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடைக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.