India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
76ஆவது குடியரசு தினத்தையொட்டி தேனியைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், தீயணைப்பு அலுவலர் கே.வெற்றிவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், அதேபோல் 5 காவலர்களுக்கும் காந்தியடிகள் பதக்கமும் வழங்கினார்.
பல்லடத்தில் ஒரு கிலோ கறிக்கோழியின் (உயிருடன்) விலை ₹110ஆக உள்ளது. இதனால், சென்னையில் கோழிக்கறி விலை மாற்றமின்றி ₹220 முதல் ₹260 வரை விற்கப்படுகிறது. தோல் எடுத்தது, எலும்பில்லாதது ஆகிய கறி வகைகளின் விலை இதனைவிட சற்று அதிகமாக இருக்கும். நாமக்கல்லில் ஒரு முட்டையின் மொத்த கொள்முதல் விலை ₹4.90ஆக உள்ளது. சென்னையில் ஒரு முட்டை ₹5.30க்கு விற்கப்படுகிறது.
விக்ரம், அசின் நடித்த ’மஜா’ படத்தின் இயக்குநர் சஃபி (56) கொச்சியில் இன்று காலை காலமானார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மலையாளத்தில் அவர் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தார்.
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதினை மதுரை மாநகரம் பெற்றுள்ளது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதில், இரண்டாவது இடத்தினை திருப்பூர் மாநகரக் காவல் பெற்றது. மூன்றாவது பரிசு திருவள்ளூர் மாவட்டக் காவலுக்கு வழங்கப்பட்டது.
டென்மார்க் நாட்டின் The Dannebrog கொடி, 1625ல் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இது 1219ல் லிண்டானிஸ் போரின் (Battle of Lyndanisse) போது வானத்திலிருந்து விழுந்ததாக கதைகள் உண்டு. 2வது இடத்தில் நெதர்லாந்தின் de Nederlandse vlag கொடி 1640ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3வது இடத்தில் நேபாளின் Chandra Ra Surya கொடி 1743ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா 59வது இடத்தில் இருக்கிறது.
76ஆவது குடியரசு தினத்தையொட்டி பள்ளிகளில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். அதன்பின், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். இளம் வயதிலேயே மாணவர்களின் மனதில் தேசப்பற்று வளர இந்த கொடியேற்ற நிகழ்ச்சிகள் காரணமாக அமையும். பெற்றோர் இந்நாளை விடுமுறை போல கருதாமல் மாணவச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பி நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும்.
ஆக. 15 சுதந்திர தினத்தில் கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுக்கப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படும். சுதந்திரம் கிடைத்ததை மரியாதை செய்யும் விதமாக நடைபெறும் இதை ‘கொடியேற்றம்’ (Flag hoisting) என்பார்கள். ஜன. 26 குடியரசு தினத்தில் கொடி கம்பத்தின் உச்சியிலேயே கட்டப்பட்டு இருக்கும். முடிச்சு அவிழ்க்கப்பட்டு கொடி திறந்து பறக்கவிடப்படும். இதை கொடியை பறக்கவிடுதல் (Flag unfurling) என்பார்கள்.
கடந்த ஆண்டில் ₹699க்கு அறிமுகமான ஜியோ பாரத் 4G மொபைல் போன் வைத்திருக்கும் சிறு வணிகர்கள் UPI பரிவர்த்தனை குறித்த தகவலை அவர்களின் போனில் ஒலி வடிவில் இலவசமாக பெறும் வசதியை JIO அறிமுகம் செய்துள்ளது. தற்போது பரிவர்த்தனை ஒலிபெருக்கி சாதனத்துக்கு சிறு வணிகர்கள் மாதம் ₹125 வரை கட்டணம் செலுத்தும் நிலையில், ஜியோ போனில் இதனை இலவசமாக பெறலாம். இதன் வாயிலாக வணிகர்கள் ஆண்டுக்கு ₹1,500 சேமிக்க முடியும்.
கூகுள் MAP காட்டிய ராங் ரூட்டால் டெல்லியிலிருந்து நேபாளத்திற்கு சைக்கிளில் சுற்றுலா சென்ற பிரான்ஸ் பயணிகள் அணையில் சிக்கிய அவலம் நேர்ந்துள்ளது. பிரைன் கில்பர்ட், செபஸ்டியன் கபீரியல் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை காத்மாண்டு செல்லும் வழியில் UPஇன் சுரெய்லி டேமில் சிக்கினர். அவர்களை மீட்டு உள்ளூர் மக்கள் உதவி செய்து சரியான வழியில் அனுப்பி வைத்தனர். உங்களுக்கு இந்த மாதிரி மோசமான அனுபவம் இருக்கா?
நடிகர் அஜித்துக்கான பத்ம பூஷன் விருதுக்குப் பின்னால் அரசியல் இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இந்த விருதுக்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது. ஆனால், இவ்வளவு விரைவாக கொடுப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. விஜய், கட்சி தொடங்கிய பிறகு அஜித் ரசிகர்கள் வாக்குகளை பெற DMK, அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்படும் நிலையில், விருது அரசியலை BJP எடுத்துள்ளதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.