news

News January 1, 2025

புத்தாண்டில் உச்சம் தொட்ட Condom விற்பனை

image

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணி வரை மட்டும் 4779 ஆணுறைகள் விற்பனையானதாக Swiggy Instamart தெரிவித்துள்ளது. இது கடந்த காதலர் தினத்தை விடவும் அதிக விற்பனையாம். Swiggy Instamart அதிகளவில் விற்பனையான டாப் 5ல் பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பன்னீர் ஆகியவை இடம்பெற்றன. இருப்பினும் விற்பனையில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தை விட சென்னை பின்தங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2025

நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? அன்புமணி விளாசல்

image

கள்ளக்குறிச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 7 நாட்களாகியும் போலீசார் வேடிக்கை பார்ப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். DMK ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சாடிய அவர், நாம் வாழ்வது நாடா, சுடுகாடா என வினவியுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் சரியாக புலன் விசாரணை செய்யாமல் குற்றவாளிகளை தப்ப வைக்க காவல்துறை சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 1, 2025

அதிமுக, இரட்டை இலையை எங்களிடம் கொடுங்க: OPS

image

அதிமுகவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ECIக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 2021 டிச.6இல் நடந்த அதிமுக தலைமைக்கான தேர்தலை யாரும் எதிர்க்கவில்லை எனவும், அதனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனக்கே கட்சியில் அதிகாரம் உள்ளது எனவும் தன்னை இபிஎஸ் நீக்கியது செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் என இபிஎஸ்-க்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 1, 2025

மொத்த மனநிலையும் நாசமா போச்சு: கதறும் அஜித் ஃபேன்

image

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அறிவிக்கப்பட்டபடி, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என நேற்று அறிவிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் வேதனையடைந்த நிலையில், அஜித் ரசிகர் ஒருவரின் சோஷியல் மீடியா பதிவு வைரலாகி வருகிறது. அதில், இனிமேல் நான் அஜித்தின் ரசிகன் அல்ல என்றும், வருடத்தின் தொடக்கத்திலேயே ஒட்டுமொத்த மனநிலையும் நாசமாகிவிட்டது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். So sad….

News January 1, 2025

BREAKING: IRCTC இணையதளம் முடங்கியது

image

ரயில் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு நாட்டு மக்களால் IRCTC இணையதளம், செயலியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த தளம் கடந்த சில நாள்களாக முடங்கி வருகிறது. நேற்று 3ஆவது முறையாக அந்த தளம் முடங்கியது. இந்நிலையில், 4ஆவது முறையாக இன்றும் IRCTC தளம் முடங்கியுள்ளது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

News January 1, 2025

மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்.. உத்தரவு பறந்தது

image

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 2025-26ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

News January 1, 2025

களஞ்சியம் இன்று முதல் கட்டாயம்!

image

TN அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் களஞ்சியம் (Kalanjiyam) ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமே இனி CL, EL விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது தவிர, Pay Slip, Pay Drawn, Particulars போன்ற தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பண்டிகை காலத்தில் முன்பணம், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முன்பணம் ஆகியவற்றுக்கும் இந்த ஆப் மூலமே விண்ணப்பிக்கலாம் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

News January 1, 2025

100ஆவது ராக்கெட் விரைவில் ஏவப்படும்: சோம்நாத் அறிவிப்பு

image

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, ஜனவரி மாதத்தில் 100ஆவது ராக்கெட்டை ஏவும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜன.7 ‘ஸ்பேஸ் டாக்கிங்’ எனப்படும், இரு செயற்கைக்கோள்களும் ஒருங்கிணைக்கப்படும்.
புதிய சிந்தனையுடன், குறைந்த செலவில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள 24 ஆய்வு கருவிகளும் விரைவில் ஆய்வு மேற்கொள்ளும்” என்றார்.

News January 1, 2025

தென்மாவட்டங்களில் மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழை

image

தென்மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்துவில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து நாலுமுக்கில் 16 சென்டி மீட்டர், காக்காச்சியில் 15 சென்டி மீட்டர், மாஞ்சோலையில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

News January 1, 2025

WHATSAPPஇல் அனைவருக்கும் பேமண்ட் வசதி

image

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் WHATSAPP பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் அதில் அறிமுகமான பேமண்ட் வசதியை 10 கோடி பேர் மட்டுமே பயன்படுத்த தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் 2025 முதல் அனைவருக்கும் அந்த வசதியை வழங்க WHATSAPPக்கு தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் அனுமதி அளித்துள்ளது. இதனால் WHATSAPP வைத்திருக்கும் அனைவரும் இனி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

error: Content is protected !!