India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிச.23ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. டிச.24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜன.2) திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பேட்மிண்டன் வீராங்கனைகளில் இந்தியாவின் PV சிந்து (29) முதலிடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை 2024இல் அதிகம் சம்பாதித்த வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 2024இல் PV சிந்து ₹61 கோடியை வருமானமாக ஈட்டியதாக (போட்டிகளில் வென்ற தொகை ₹86 லட்சம், விளம்பர ஒப்பந்தம் ₹60 கோடி) கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 6ஆவது ஆண்டாக போர்ப்ஸ் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலனி” படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகி பாபு இன்று திருத்தணி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்ய அவர் வந்ததை அறிந்த ரசிகர்களும், பக்தர்களும் அவருக்கு கை கொடுத்தும், புகைப்படம் எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினார். சாமி தரிசனத்திற்குப் பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “அறவழி மீறி மக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரை விடக் கொடியது என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது நடக்கும் அத்தகைய ஆட்சியை அகற்ற 2025ஆம் ஆண்டில் வலிமையான அடித்தளம் அமைப்போம். நேர்மையான ஆட்சி அமைய பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி BGT தொடரில் தடுமாறி வரும் சூழலில் ரசிகர்கள் அணியில் புஜாரா இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். தலைமை பயிற்சியாளர் கம்பீரும் தொடரில் புஜாரா விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளிவருகின்றன. ஆஸி.யில் இதுவரை 11 டெஸ்ட் மேட்சில் விளையாடியுள்ள புஜாரா 993 ரன்களை குவித்துள்ளார். அவரின் Average 47.23. இது ஒரு Costly தவறோ என தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
விடாமுயற்சி படத்தை பார்த்த பின் அஜித் சொன்ன விஷயங்களை அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விடாமுயற்சி படத்தை அஜித் சார் பார்த்துவிட்டு ‘இதுபோன்ற படங்களில்தான் நடிக்க தொடர்ந்து விரும்புகிறேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல், வலுவான கதைக்களம் கொண்டதாக ‘விடாமுயற்சி’ படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாளாகும். நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு, இறப்பு, TC வாங்கிய மாணவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் பலியானதற்கு திமுகவே காரணம் என அதிமுக Ex. அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், போராட்டம் தொடங்கிய 28 நாட்களில், ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூடிவிட்டோம். ஆனால், திமுகவின் கீதா ஜீவன் பொய் பரப்புரை செய்து போராட்டத்தைத் தூண்டிவிட்டு, ஊர்வலம் நடத்தினார். ஆனால், அந்த ஊர்வலத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.