news

News January 27, 2025

மார்ச் 7இல் ‘நிறம் மாறும் உலகில்’ ரிலீஸ்

image

‘நிறம் மாறும் உலகில்’ படம் மார்ச் 7ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ JP இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாரதி ராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி மாஸ்டர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். உறவுகளின் அவசியம் குறித்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

News January 27, 2025

ஜனவரி 27: வரலாற்றில் இன்று!

image

*1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகமான ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
*1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக, இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.
*1880 – தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
*1888 – தேசிய புவியியல் கழகம், வாசிங்டன் DCயில் அமைக்கப்பட்டது.
*1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு, பாரிசில் எட்டப்பட்டது.

News January 27, 2025

₹20 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த இந்தியா

image

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில், ₹20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது. டாவோஸ் நகரில் நடைபெற்ற 54ஆவது ஆண்டு கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் 5 பேர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா முதல்வர்கள் பங்கேற்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் ₹15.70 லட்சம் கோடி மதிப்பிலான 61 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

News January 27, 2025

சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சண்டிகரை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் TN 301, CG 204 ரன்கள் எடுத்தன. 2ஆவது இன்னிங்ஸில் TN 305/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில், தொடர்ந்து ஆடிய CG 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

News January 27, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

*குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. குறிக்கோளில் இல்லை – மகாத்மா காந்தி.
*அதிகாலையில் எழுந்துவிட்டாலே, தோல்விகள் உங்களைவிட்டுத் தாமாக ஒதுங்கிப் போய்விடும் – அப்துல் கலாம்.
*மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது; சூரியன், சந்திரன் மற்றும் உண்மை – புத்தர்.
*என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை, என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே – ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

News January 27, 2025

ICC எமர்ஜிங் PLAYERS கமிந்து மென்டிஸ், அன்னெரி டெர்க்சன்

image

2024ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வளர்ந்து வரும் வீரராக SL அணியின் கமிந்து மென்டிஸும், வளர்ந்து வரும் வீராங்கனையாக SA அணியின் அன்னெரி டெர்க்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை ஆண்டுதோறும் ஐசிசி இவ்வாறு கவுரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 27, 2025

விடாமுயற்சி டிரெய்லரை பாராட்டிய பிரித்விராஜ்

image

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். மலையாள ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களில் ஒன்று, ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் தான் என புகழ்ந்து தள்ளினார். யாரெல்லாம் விடாமுயற்சி படம் பார்க்க வெயிட்டிங்? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 160
▶குறள்: உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
▶பொருள்: பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

News January 27, 2025

அரிட்டாப்பட்டி மக்களுக்கு அடுத்த HAPPY NEWS

image

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தல்லாகுளம், மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News January 27, 2025

TN புகழ் உலகளவில் உயர்ந்துள்ளது: TRB.ராஜா

image

TN வளர்ந்துள்ளதை EPS அறியவில்லை என அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். WEF 2025 கூட்டத்தில், திமுக அரசு என்ன சாதித்தது? என EPS கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவில் 2வது பெரிய பொருளாதார மாநிலம் TN என்பதை அறியாமல், அற்பதனமாக அறிக்கை விடுத்துள்ளதாக சாடினார். மேலும் CM ஸ்டாலினின் ஆட்சித்திறனால், TNஇன் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறப்பதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!