news

News January 27, 2025

வங்கிக் கணக்கில் ரூ.2,000.. இது கட்டாயம்

image

பிஎம் கிஷான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி, வருகிற பிப். மாதம் ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த தொகை சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய ஜன.31க்குள் E-KYC செய்வது கட்டாயம் ஆகும். இல்லையெனில் ரூ.2,000 வராது. இதுவரை E-KYC செய்யாதோர், pmkisan.gov.in தளத்தில் எளிதில் செய்யலாம்.

News January 27, 2025

தலைவர் பதவிக்கு ஆசையா? தமிழிசை ஓபன் டாக்

image

தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்பதில் துளியும் உண்மையில்லை என தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கட்சியின் விதிகள்படி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாகவும் கூறிய அவர், பதவி ஆசையில் தான் ஆளுநர் பதவியை விட்டு வரவில்லை என்றார். மேலும், தான் எந்த பதவியையும் கேட்டு வாங்கியதில்லை என்று கூறிய அவர், தன் பணியை பார்த்து கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

News January 27, 2025

பிரச்னைகளை முறியடிப்பாரா ஜன நாயகன்!

image

‘ஜன நாயகன்’ என்ற தலைப்பின் மூலம் இப்படத்தில் அரசியல் வசனங்கள் தெறிக்குமென சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விஜய். தனது ஐகானிக் செல்ஃபி லுக்கில், தொண்டர்களை புகைப்படம் எடுப்பது மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே நேரம், விஜய் படம் என்றாலே ரிலீஸில் பிரச்னை இருக்கும், இப்படம் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க போகிறதோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

News January 27, 2025

காலை சோர்வை விரட்டும் நச் ‘3’ டிப்ஸ்!!

image

*கொஞ்சம் நீரிழப்பு ஏற்பட்டாலும் அன்றைய நாள் முழுவதுமே சோம்பலாகவே இருந்து விடும். ஆகையால் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள் *சூரிய ஒளி காலையில் பெறுவது வைட்டமின் டி கிடைக்க உதவும். சூரிய ஒளி மூளையில் செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது * குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதால், முகத்தை குளிர்ந்த நீரால் தெளித்து, கழுவுங்கள்.

News January 27, 2025

காங்கிரஸ்-ஆம் ஆத்மி குடுமிப்பிடி சண்டை

image

ஆம் ஆத்மி வெளியிட்ட நேர்மையற்ற தலைவர்கள் சுவரொட்டியில் ராகுல் இடம்பெற்ற விவகாரம் டெல்லி அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றிய, கல்காஜி தொகுதி காங்., வேட்பாளர் அல்கா லம்பா, கெஜ்ரிவாலுக்கு தைரியம் இருந்தால் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என சவால் விடுத்தார். மேலும், மக்களவைத் தேர்தலின்போது தங்களுடன் கூட்டணி வைக்க அவர் கெஞ்சியதாகவும் விமர்சித்தார்.

News January 27, 2025

வாழைத் தண்டில் ஒளிந்துள்ள ரகசியம்…

image

*காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறு ஆகியவற்றை வாழைத் தண்டு குணமாக்கும்.
*வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் விரைவில் குணமாகும்.
*வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தேள், பூரான் கடித்த இடத்தில் தடவினால் வலி குறையும். கோழைக் கட்டு ஆகியவை இளகும்.
*வாழைத் தண்டில் பொட்டாசியம், வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் உள்ளன.

News January 27, 2025

‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

image

சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார். இருவரும் பீடி குடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

News January 27, 2025

கல்வி நிறுவனங்களுக்கு AICTE எச்சரிக்கை

image

AICTE பெயரில் வரும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், AICTEயின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து மின்னஞ்சல் பெற்றால் மட்டும் அதற்கு பதிலளிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மோசடி குறித்து அறியவந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News January 27, 2025

முதுமையிலும் இளமையாக இருக்க…

image

கருஞ்சீரகம் 50 gm, ஓமம் 100 gm, வெந்தயம் 200 gm எடுத்து இளஞ்சூட்டில் வறுத்துக்கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு பொடிபோல அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பொடியை நாள்தோறும் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு ஸ்பூன் சுடு தண்ணீரில் கலந்து பருகலாம். தினசரி இவ்வாறு குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் உள்பட அனைத்துவித கழிவுகளும் வெளியேறிவிடும். முதுமையிலும் உடல் அரோக்கியமாக இருக்கும்.

News January 27, 2025

அபார வெற்றி பெற்ற குகேஷ்

image

டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் போட்டியின் 7வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், உலக சாம்பியனுமான குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற போட்டியில், சக நாட்டு வீரர் ஹரிகிருஷ்ணாவை வீழ்த்தி முழு புள்ளிகளையும் அவர் கைப்பற்றினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாட்டோரோவுடனான போட்டியை டிரா செய்தார்.

error: Content is protected !!