India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, தைப்பூச தினமான பிப்ரவரி 11 மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அங்கு சாமி தரிசனம் செய்ய கட்டணம் இல்லை என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும், பழனி ரயில் நிலையம், சண்முக நதி, மலை அடிவாரம் ஆகிய பகுதிகளுக்கு இலவச பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரமும் அவர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனிதரின் கிரியேடிவிடியால் தோன்றுவது தான் டெக்னாலஜி என்றாலும், தற்காலத்தில் நம் தினசரி வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். இதனால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?
சென்னையில் CM ஸ்டாலின் தலைமையில் ஜன.29ல் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இதில், மத்திய அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று காலை முதலே உலக அளவில் பங்குச்சந்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. இன்று மிட்கேப் பங்குகளின் மதிப்பு, பெரும் சரிவைக் கண்டதால், முதல் 2 hr-ல் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அமெரிக்க தொழில்கொள்கை பற்றிய நிச்சயமின்மையே இந்த சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட்டுக்கு 4 நாள்களே உள்ள நிலையில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நம்மிடம் போன் இல்லாதபோதும், போன் இருந்தும் நாம் நினைக்கும் நேரத்தில் பயன்படுத்த முடியாத போதும், பலருக்கும் ஒரு பய உணர்வு ஏற்படும். இந்நிலைக்கு ‘நோமோபோஃபியா’ எனப்படுகிறது. இதனால் தூக்கமின்மை, தன்மதிப்பு குறைதல், பதற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். போன் இல்லாத போது, மார்பில் டென்ஷன், நடுக்கம், வியர்த்தல், தலைச்சுற்றல், இதயத்துடிப்பு எகிறுவது என அறிகுறிகள் காட்டுமாம். உங்களுக்கு எப்படி?
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு எதிரான ஐகோர்ட்டின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்த FIR வெளியானதற்காக சென்னை காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து TN அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று IMD அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 30, 31 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். பிப்ரவரி 1ஆம் தேதி நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை திருவிக நகரில் 13, 14,16 வயது கொண்ட 3 மாணவிகள் 2 நாள்களாக காணாமல் போனதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், அரசு நூலக மாடியில் மாணவிகளுடன் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் தங்கியிருந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. அவர்கள் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி ரேப் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை TN நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிதிப்பகிர்வு திட்டப்படி TNக்கு வர வேண்டிய நிதியை வழங்குமாறும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் TNக்கு வழங்க வேண்டிய ₹1,056 கோடியை உடனே விடுவிக்க கோரியும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.