news

News January 1, 2025

பொங்கல் பரிசு ரூ.1000 இல்லாதது பெரிய விஷயமா?

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடையாது என மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசிய காங்., எம்.பி. கார்த்தி சிதம்பரம், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதால், பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல எனக் கூறியுள்ளார்.

News January 1, 2025

அதிகமாக சிரிப்பதால் சாவு கூட வரலாம்!

image

கவலையை மறக்க சிரிக்கிறோம். ஆனால், அந்த சிரிப்பே ஒரு சிலருக்கு உயிரை பறிக்க காரணமாக அமைவதுதான் சோதனை. கடுமையாக சிரிக்கும் போது ஒரு சிலருக்கு மாரடைப்பும், மூச்சுத் திணறலும் ஏற்படுவது ஹாஸ்பிடல் ரிப்போர்ட்களின் மூலம் தெரியவந்துள்ளது. சிலருக்கு நினைவு இழப்பு, மூளை நோய்கள் கூட வரலாம் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இனி காமெடி நிகழ்ச்சிகளுக்கு கூட Disclaimer போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

News January 1, 2025

வரலாற்றை மாற்றுமா இந்தியா?

image

IND vs AUS மோதும் 5ஆவது டெஸ்ட் வரும் 3ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. இதில் வென்றால் மட்டுமே, 2-2 என்ற அளவில் இந்த தொடரை IND சமன் செய்யும். ஆனால், கடந்த காலங்களில் அங்கு நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 5 போட்டிகளில் AUS வென்றுள்ளது. இந்த வரலாற்றை இந்தியா மாற்றுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News January 1, 2025

ஒரு நாளுக்கு ₹48 கோடி சம்பளம்!

image

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நபராக இந்தியாவின் ஜகதீப் சிங் உள்ளார். Quantum Scape நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஓ.வுமான சிங்கின் ஆண்டு வருமானம் ₹17,500 கோடி என Unstop ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, அவரது ஒரு மாத சம்பளம் ₹1,458 கோடியாகவும், ஒரு நாளைய சம்பளம் ₹48 கோடியாகவும் உள்ளது. Quantum Scape கம்பெனியை தொடங்குவதற்கு முன்பு, அவர் பல நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

News January 1, 2025

நிதியை திமுக அரசு என்ன செய்தது?: அண்ணாமலை

image

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது எனவும், கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா எனவும் அவர் வினவியுள்ளார். கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திமுக அரசு என்ன செய்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 1, 2025

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி!

image

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரியாக ₹ 1.77 லட்சம் கோடியை மத்திய அரசு வசூல் செய்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ₹ 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹ 40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹ 91,200 கோடி மற்றும் செஸ் வரி ₹ 12,300 கோடியாகும். எனினும், கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூலுடன் (₹ 1.82 லட்சம் கோடி) ஒப்பிடும் போது, இது சற்று குறைவுதான். உள்நாட்டு பரிவர்த்தனை மூலமாக ₹ 44,268 கோடி கிடைத்துள்ளது.

News January 1, 2025

காமெடியனின் பெருங்கோபம்

image

புத்தாண்டில் 1.22 லட்சம் காண்டம்கள், 45,531 மினரல் வாட்டர் பாட்டில்கள் BLINKIT தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டதாக அதன் CEO அல்பிந்தர் பதிவிட்டிருந்தார். அதற்கு, உங்கள் டெலிவரி பார்ட்னர்களின் சராசரி கூலி எவ்வளவு? என்ற தகவலை பதிவிட முடியுமா என காமெடியன் குணால் கம்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள், ஊழியர்களை சுரண்டும் குண்டர்களாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். உங்க கமெண்ட் என்ன?

News January 1, 2025

பொங்கல் ரேஸில் இணைந்த ‘காதலிக்க நேரமில்லை’

image

பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகாததால், சில சின்ன படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில், ஜெயம் ரவி -நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு நீள காதல் படமாக உருவாகி உள்ள இப்படத்தை, கிருத்திகா உதயநிதி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

News January 1, 2025

கவுதம் கம்பீர் நீக்கம்?

image

கவுதம் கம்பீரை நீக்க BCCI திட்டமிட்டுள்ளதாக PTI தகவல் வெளியிட்டுள்ளது. கம்பீர் தலைமையில் IND அணி, நியூசி., அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது. SLக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. ஆஸி., எதிரான BGT தொடரிலும் இந்தியா மோசமாக விளையாடி வருவது, இதற்கு முக்கிய காரணம். அதேபோல், வீரர்களுடன் சுமூகமான போக்கு இல்லையாம். இதனால் அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டி, சாம்பியன்ஸ் டிராபியும் தான் டெட் லைன் என கூறப்படுகிறது.

News January 1, 2025

மனைவி ஓடிவிடுவார்: Fun செய்த அதானி!

image

வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என Infosys நாராயண மூர்த்தி கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், Work Life Balance குறித்த ஒருவரின் கருத்தை, மற்றவர் மீது திணிக்கக் கூடாது என அதானி கூறியுள்ளார். வேலை- வாழ்க்கை சமநிலை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும், ஆனால் ஒன்று, நீங்கள் வீட்டிற்கு 8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!