news

News January 2, 2025

உங்களது கையெழுத்து நீங்கள் யார் என கூறும்!

image

நீங்கள் போடும் கையெழுத்து உங்களின் ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தும் என சைக்காலஜிஸ்ட் இதழ்கள் கூறுகின்றன. ஆண்களில் பெரிதாக கையெழுத்து போடுபவர்கள், தைரியமானவர்களாக இருப்பதாக உருகுவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெண்களில் பெரிய கையெழுத்து போடுபவர்கள், Narcissistic எனப்படும், தனக்கே அதீத முக்கியத்துவம், தன்னை சுற்றியே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற பண்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

News January 2, 2025

அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்: சசிகலா

image

2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. எங்களின் இருபெரும் தலைவர்களான MGR, ஜெயலலிதாவிட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்” என்றார்.

News January 2, 2025

பேட்டிங் தரவரிசையில் ஒரே இந்திய வீரர்

image

ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் டாப் 10 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியில் இருந்து ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, கோலி, ரோகித், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ஜெய்ஸ்வால் மட்டும் 854 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் முதலிடத்திலும், ஹாரி புரூக் 2வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 3வது இடத்தையும், டிராவிஸ் ஹெட் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News January 2, 2025

புதிதாக 25 பேரூராட்சிகள்

image

புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. இதன்படி, முகாசி பிடாரியூர், கணியூர், அரசூர், பேரூர் செட்டிபாளையம், அத்திப்பட்டு, பாடியநல்லூர், விராலிமலை, காளையார்கோவில், ஏற்காடு, மணிவிழுந்தான், பாகலூர், பட்டணம், கூத்தப்பாடி, ராயக்கோட்டை, சூளகிரி, திருமயம், தேவிபட்டினம், ஏர்வாடி, தலைவாசல், புதியம்புத்தூர், இருங்களூர், நத்தக்காடையூர், கடம்பத்தூர், கொள்ளிடம், தோக்கவாடி. இதில் உங்க ஊர் இருக்கா?

News January 2, 2025

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

image

ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார். முதல்வர் வந்ததை அறிந்து அங்கு மக்கள் திரளான கூடினர். இதை பார்த்த ஸ்டாலின், அங்கு சென்று அவர்களுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டார்.

News January 2, 2025

குழந்தை திருமணங்கள் 55% அதிகரிப்பு

image

மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 55% அளவுக்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக RTI தகவல் வெளியாகியுள்ளது. சாதிக்குள் திருமணம், மதக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மேற்கு மண்டலத்தில் இவை அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருமணம் நடந்த பிறகு பிரசவத்துக்காக ஹாஸ்பிடலுக்கு வரும்போது தான் இவை அதிகளவில் தெரிய வருகிறது. இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 2, 2025

ராசி பலன்கள் (02-01-2025)

image

➤மேஷம் – அமைதி
➤ ரிஷபம் – கவலை
➤மிதுனம் – விருப்பம்
➤கடகம் – சிக்கல்
➤சிம்மம் – இன்பம்
➤கன்னி – போட்டி
➤துலாம் – தெளிவு
➤விருச்சிகம் – பரிசு
➤தனுசு – இரக்கம்
➤மகரம் – பெருமை
➤கும்பம் – ஆதாயம் ➤மீனம் – செலவு

News January 2, 2025

மஞ்சள் கயிறுடன் வந்தது ஏன்?: கீர்த்தி விளக்கம்

image

‘பேபி ஜான்’ புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மஞ்சள் தடவிய தாலி கயிறுடன் வந்தது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். தாலி கட்டிய பின் குறிப்பிட்ட நாள்களுக்கு மஞ்சள் கயிறு இருக்க வேண்டும் என்பதால், அப்படி வந்ததாகவும், அந்த குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நல்ல நாள் இல்லாததால் தங்க செயினுக்கு மாற்றவில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார். மேலும், தங்க செயினை விட இதுதான் புனிதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

T20, ODIயில் இந்தியா, Testஇல் ஆஸி., நம்பர் 1

image

ICC-யின் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தையும், ஆஸி., 2வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால், சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடிய இந்தியா, முதல் இடத்தை பறிகொடுத்துள்ளது. இதனால், ஆஸி., முதல் இடத்தையும், இந்தியா 2வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல், டெஸ்ட்டில் தெ.ஆப்., ஒருநாள் போட்டியில் பாக்., டி20யில் இங்கி., ஆகிய அணிகள் 3ஆவது இடத்தை பிடித்துள்ளன.

News January 1, 2025

மன்மோகன் சிங் நினைவிட பணிகள் தீவிரம்

image

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, ராஜ்காட் அல்லது கிசான் காட் பகுதியில் 1 -1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை மன்மோகன் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நினைவிடம் அமையும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரு, இந்திரா காந்தி நினைவிடங்கள் உள்ள ராஜ்காட் பகுதியிலேயே நினைவிடம் அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!