news

News January 27, 2025

டிரம்புக்கு Call செய்த பிரதமர் மோடி

image

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்து கொண்டார். டிரம்பின் ஆட்சியில் அமெரிக்கா பல சாதனைகளை புரியவும் அவர் வாழ்த்தினார். டிரம்ப் பதவிக்கு வந்த பின், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசிக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.

News January 27, 2025

BREAKING: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,418 பணியிடங்களில் பணிபுரிவோர் ஓய்வு பெறும்போது அவை ஒழிவடையும் (Vanishing post) பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், 145 பணியிடங்களுக்கு டிச.31, 2028 வரை நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

News January 27, 2025

13 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் கோலி

image

ரஞ்சி டிராபியில் ரயில்வே அணிக்கு எதிரான, டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் ரிஷப் பண்ட் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம், 13 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த போட்டி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் சொதப்பிய நிலையில், இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 27, 2025

நவபஞ்சம ராஜயோகம்: துள்ளி குதிக்க போகும் 4 ராசிகள் ❤️

image

தை மாதத்தில், குருவுக்கு 9ஆம் வீட்டில் சூரிய பகவானும், சூரியனுக்கு 5ஆம் வீட்டில் குரு பகவானும் சஞ்சரிக்க தொடங்கியுள்ளதால் 4 ராசிகளுக்கு நவபஞ்சம ராஜயோகம் அடிக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்படி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வருமானம் பல மடங்கு உயரும். திறமையை வெளிப்படுத்தி முன்னேறும் காலம் இது. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

News January 27, 2025

பாஜக புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

image

பாஜகவில் சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சிக்காக உழைக்காதவர்கள் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது. குறிப்பாக, வேலூர் மாவட்டத் தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.

News January 27, 2025

2025 நீட் தேர்வில் மாற்றம்: மாணவர்களே அலர்ட்

image

2025 NEET UG தேர்வுமுறை திருத்தப்பட்டுள்ளதாக NTA அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு நடத்தப்பட்ட முறையிலேயே நடப்பு ஆண்டுக்கான தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளில் இனி Optional கேள்விகள் இடம்பெறாது. 180 கட்டாய கேள்விகள் மட்டுமே இடம்பெறும். 3 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். மேலும், APAAR ஐடி கட்டாயமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2025

இந்த நோய் குறித்து கவலை வேண்டாம்: மருத்துவத்துறை

image

Guillain- Barre Syndrome பற்றி தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. புனேவில் இந்த நோயால் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், Guillain- Barre Syndrome தொற்று வியாதி அல்ல. குணப்படுத்தக் கூடியது தான். இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளதால், கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளது.

News January 27, 2025

OLD MONK பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

மதுபானங்கள் பல இருந்தாலும் ‘ஓல்டு மாங்க்’ OLD MONK ரம்முக்கு இருக்கும் மார்க்கெட்டே தனி. பலருக்கு இப்பெயர் ஏன் வந்தது என தெரியாது. சுதந்திரத்திற்கு பிறகு, தொழிலதிபர் நரேந்திர மோகன், பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்து இமாச்சலில் உள்ள கசோலி மது ஆலையை வாங்கினார். அங்கு அவர் தயாரித்த உயர்தர ரம்முக்கு, அங்குள்ள பெனடிசிடின் துறவிகளின் நினைவாக அவரது மகன் ரத்தன் மோகன் OLD MONK என பெயரிட்டார்.

News January 27, 2025

அன்று ஒரு “SIR” இன்று பல “SIR”கள்.. இபிஎஸ் விமர்சனம்

image

சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். “SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக விமர்சித்த அவர், சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்படுத்த வேண்டும் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என சாடினார்.

News January 27, 2025

அழகாக இருப்பது ஒரு குற்றமா?

image

PAK முன்னாள் வீரர் அகமது சேஷாத், தான் பெர்சனாலிட்டியாக இருந்ததால் கிடைத்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அணியில் ஒரு இளம் வீரர் அழகாகவும், சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றால், அது சீனியர் வீரர்களுக்கு பிடிக்காது எனவும், அந்த இளம் வீரர் ஓரங்கட்டப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் போல் இன்னும் சில வீரர்கள் இதை அனுபவித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!