news

News January 2, 2025

இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்: வினோத் காம்ப்ளி

image

ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். மது, போதைப்பொருள் இரண்டும் வாழ்க்கையை அழிப்பதாகவும், தயவுசெய்து அவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார். வாழ்க்கை மிகவும் அழகானது. அதை அனுபவியுங்கள், அழிக்காதீர் என்றார். விரைவில் தான் இயல்பு நிலைக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

News January 2, 2025

தினம் ஒரு பொன்மொழி!

image

▶எளிமை என்பது எளிதான விடயம் அல்ல. ▶ஒரு மனிதனின் உண்மையான குணம் அவன் போதையில் இருக்கும்போது வெளியே வரும். ▶உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது. ▶நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், உங்களால் ஒருபோதும் வானவில்லைக் காணமுடியாது. ▶புத்திசாலித்தனத்தை விட, அன்பும் கருணையுமே இப்போது இந்த பூமிக்கு தேவை.
– சார்லி சாப்ளின்

News January 2, 2025

சபரிமலையில் சிறப்பு பாஸ் நிறுத்தம்

image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்வதற்காக வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் வசதி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். இதனால், சன்னிதானத்தில், ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தடுக்கும் நோக்கில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News January 2, 2025

2,000 ரூபாய் நோட்டு: ₹6,691 கோடி வரவில்லை

image

பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.12% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக RBI கூறியுள்ளது. இன்னும் ₹6,691 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மே.19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக RBI அறிவித்தது. தொடர்ந்து, வங்கிக்கு திரும்பிய நோட்டுகள் குறித்த விவரங்களை RBI வெளியிட்டு வருகிறது.

News January 2, 2025

இன்று அரையாண்டு தேர்வு

image

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. அத்தேர்வுகள் இன்று முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனுடன், டிச.12ம் தேதி 21 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும் நடைபெற உள்ளது.

News January 2, 2025

டிஜிட்டல் பேமெண்டில் சாதனை

image

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ₹23.25 லட்சம் கோடி மதிப்பிலான UPI பரிவர்த்தனை நடந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட 2016 முதல், இதுவே அதிகபட்ச பரிவர்த்தனையாகும். முன்னதாக, கடந்த நவம்பரில் ₹21.55 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அது டிசம்பரில் 8% அதிகமாக நடந்துள்ளது. கடந்த 2023ஐ காட்டிலும் 46% UPI பரிவர்த்தனை 2024ல் அதிகரித்துள்ளதாக NCPI தெரிவித்துள்ளது.

News January 2, 2025

பும்ராவுக்கு புது ரூல்ஸ் கொண்டு வர வேண்டும்: ஆஸி., PM

image

ஆஸி., PM அல்பனீஸ் உடன் இந்திய அணி புத்தாண்டு கொண்டாடியது தெரிந்ததே. இச்சமயத்தில் பும்ராவை அல்பனீஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அப்போது, ஆஸி.,யில் பும்ரா இடது கை (அ) கிரீஸுக்கு ஒரு அடி பின்னால் பந்து வீச வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும் என்று கேலி செய்தார். இதனிடையே, MCG போட்டியில் கோலியால் தாக்கப்பட்ட ஆஸி., இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் கொண்டாட்டத்தின் போது கோலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

News January 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 136 ▶குறள்: ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. ▶பொருள்: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

News January 2, 2025

நாட்டில் முதல்முறையாக விமானத்தில் WiFi

image

உள்நாட்டு விமான பயணத்தின் போது விமானங்களில் வைபை வசதி வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் விமான பயணத்தில் WiFi சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர்பஸ் A350, போயிங் 787-9, ஏர்பஸ் A321 நியோ விமானங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் விமான பயணத்திலும் இனி தடையின்றி இணைய சேவை பெறலாம்.

error: Content is protected !!