news

News January 2, 2025

மீண்டும் கேப்டன் ஆக கோலி விருப்பம்

image

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்க விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு BGT தொடருடன் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2027 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாட கோலி விரும்புவதாகவும் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் வரை தற்காலிக கேப்டனாக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

News January 2, 2025

சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது!

image

சிறைகளில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. சிறைகளில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலைகள் வழங்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

News January 2, 2025

உங்களை வெற்றியாளராக்கும் 7 பழக்கங்கள்

image

➠ வாழ்க்கையில் சோம்பேறித்தனம் வேண்டாம் ➠ நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ➠ ஒவ்வொருக்கும் ஒரு பாதை உண்டு , நேரம் உண்டு யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம் ➠ பிறரை பார்த்து பொறாமை கொள்வதை நிறுத்துங்கள் ➠ Over Confidence ரொம்ப டேஞ்சர் bro ➠ எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய வேலையில் சிந்தனை வையுங்கள் ➠ மிகவும் முக்கியமானது உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.

News January 2, 2025

GHஇல் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் மூவர் பலி

image

ராமநாதபுரம் GHஇல் ஏற்பட்ட தீ விபத்தால், சிகிச்சைக்கு வந்த மூவர் ஹாஸ்பிட்டல் வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் 2வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு GHஇல் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்நேரத்தில் வாலாந்தரவை விலக்கில் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்த சாதிக், அனீஷ், பாத்திமா ஆகியோர் வாசலிலேயே மரணிக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

News January 2, 2025

37 லட்சம் மாணவர் சேர்க்கை சரிவு

image

நாடு முழுவதும் 2023-24 கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், செயல்படும் UDISE+ வெளியிட்ட டேட்டாவின் படி, 2022-23ஆம் ஆண்டில் 25.17 கோடி மாணவா்கள் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இது 2023-24ஆம் ஆண்டில் 24.80 கோடியாக 37 லட்சம் சரிந்துள்ளது. மாணவர்களின் இடைநிற்றலுக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக NEP குழு விளக்கம் அளித்துள்ளது.

News January 2, 2025

பொங்கல் பரிசு வினியோகம்: கார்டுக்கு ₹5 ஊக்கத்தொகை?

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு ₹5 ஊக்கத்தொகை வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் டோக்கன் வழங்குவது என ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அதனால், இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்க குறைந்தது கார்டுக்கு ₹2 – 5 வரை வழங்குமாறு வலியுறுத்தினர். 2018 முதல் ஒரு கார்டுக்கு அரசு 50 காசு ஊக்கத்தொகை வழங்குகிறது.

News January 2, 2025

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

image

தமிழகத்தில் 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

News January 2, 2025

பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை

image

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும், பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக லிட்டருக்கு ₹3 என்ற அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக சில மாவட்டங்களில் இந்த வாரம் முதல் இந்நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

News January 2, 2025

ஜன.2: வரலாற்றில் இன்று

image

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.

News January 2, 2025

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

image

ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு இதன் அறிகுறிகளாகும். இதற்கு உரிய சிகிச்சை பெறவில்லையெனில், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

error: Content is protected !!