news

News January 28, 2025

மகப்பேறு மருத்துவம்.. மீண்டும் கவனம் செலுத்த உத்தரவு

image

கொரோனா காலத்தில் மருத்துவ கட்டமைப்பு அனைத்தும் கோவிட் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால் மகப்பேறுகால தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பெண்களுக்கான சேவையில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கொரோனா குறைந்து விட்டதால், மீண்டும் கவனம் செலுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2.6 கோடி குழந்தைகள், 2.9 கோடி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

News January 28, 2025

டிஸ்சார்ஜ் ஆனார் அமைச்சர் ரகுபதி!

image

நெஞ்சு வலியால் திருச்சியில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீடு திரும்பினார். கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த ரகுபதிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள காவேரி ஹார்ட் சிட்டி ஹாஸ்பிட்டலில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நெஞ்சில் அடைப்பு கண்டறியப்பட்டதால் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.

News January 28, 2025

பிப். 1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு:அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ. ஜாஹீர் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும், அதன்பிறகு ஒவ்வொரு 1 கி.மீ. தூரத்திற்கும் ரூ.18 வசூலிக்கப்படும். இரவு கட்டணம் பகலை விட 50% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

‘பத்மபூஷன்’ அஜித்குமாரின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்த மிகச் சில நடிகர்களில் ஒருவர்தான் அஜித்குமார். தற்போது நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்கும் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ.350 கோடி எனக் கூறப்படுகிறது. மேலும், அவரிடம் Porsche GT3 RS, Ferrari SF90, BMW 740Li, Mercedes-Benz 350 GLS, Lamborghini ஆகிய சொகுசு கார்களும் உள்ளன.

News January 28, 2025

அதிகப்படியாக முடி உதிரும் பிரச்னை இருக்கா?

image

வைட்டமின் குறைபாடுகள், மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை என முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில், வைட்டமின் D குறைபாடு முக்கிய காரணிகளில் ஒன்று. சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் D-யை அளிக்கிறது. ஆகையால், முடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் கொழுப்பு நிறைந்த மீன்களும் உடலுக்கு வைட்டமின் D-யை கொடுக்கும்.

News January 28, 2025

ஹோம்ஒர்க் செய்யவா சொல்ற.. இரு வர்றேன்..

image

சீனாவில் ஹோம்ஒர்க் செய்யாமல் இருந்த 10 வயது சிறுவனை அவனது தந்தை கண்டித்துள்ளார். உடனடியாக அச்சிறுவன் யாருக்கும் தெரியாமல் போலீஸுக்கு போன் செய்து, தனது தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக கூறியுள்ளான். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், வீட்டில் சோதனை நடத்திய போது அபின் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. அது தனது மருந்து பயன்பாட்டுக்கு என சிறுவனின் தந்தை கூறிய போதிலும், போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 28, 2025

பாஜகவில் இணையும் அம்பத்தி ராயுடு?

image

Ex. CSK வீரர் அம்பத்தி ராயுடு பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ABVP நிகழ்ச்சியில், பாஜகவிற்கு ஆதரவாக அவர் சில கருத்துகளை பேசி இருப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. ஆனாலும், இந்த தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அம்பத்தி ராயுடு, ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சியில் இணைந்து சில நாட்களிலேயே வெளியேறினார். தற்போது அவர் எந்த கட்சியிலும் இல்லை.

News January 28, 2025

பாஜக ரூ.3,967 கோடி, காங்கிரஸ் ரூ.1,129 காேடி நன்கொடை

image

2023-24இல் பாஜக நன்கொடையாக ரூ.3,967 கோடி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 2022-23இல் பாஜக ரூ.2,120 கோடி பெற்றதாகவும், 2023-24இல் ரூ.3,967 கோடி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, 87% அதிக நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு 2022-23இல் ரூ.268 கோடி கிடைத்ததும், தற்போது 320% அதிகரித்து, ரூ.1,129 கோடி கிடைத்ததும் கூறப்பட்டுள்ளது.

News January 28, 2025

22,931ஆவது ஸ்மார்ட் வகுப்பறை.. இலக்கு நிறைவு

image

வீடியோ, படங்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிதில் பாடம் போதிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் TN அரசால் செயல்படுத்தப்பட்டது. மொத்தம் 22,931 வகுப்பறை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 22,931ஆவது வகுப்பறையை ஒக்கியம் துரைப்பாக்கம் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். ரூ.455 கோடி மதிப்பிலான இத் திட்டத்தின் மூலம் 11.76 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

News January 28, 2025

இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு.. 2 மீனவர்கள் காயம்

image

நேற்று முன்தினம் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்த 33 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், தற்போது காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இரவில் கைது செய்துள்ளது. அப்போது தப்பிச் சென்றதாக கூறி, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை படகு மோதியதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!