news

News January 28, 2025

ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி கொலை

image

திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வரும் திலீப் என்பவரின் கூட்டாளி அன்பு (29). இன்று காலை பைக்கில் வந்த அவரை, மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அங்கிருந்து தப்பியோடி அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கார் பார்க்கிங்குக்குள் நுழைந்தார். விடாமல் துரத்திய மர்மநபர்கள், அங்கு வைத்தே அவரை வெட்டி சாய்த்தனர். பட்டப்பகலில் கோயில் அருகே நடந்த இந்த கொலை பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

News January 28, 2025

FEBல் மோடி USA வருவார்: டிரம்ப்

image

பிரதமர் மோடி, அடுத்த மாதம் அமெரிக்கா வந்து தன்னை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, அவர் இதை கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ஆயுதங்கள் வாங்குவதை அதிகரிப்பது, வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு பற்றி விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News January 28, 2025

10வது போதும்: மத்திய அரசில் மாதம் ₹69,100 வரை சம்பளம்

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) கான்ஸ்டபிள், டிரைவர்களுக்கான 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10வது முடித்து, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்து, உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும். பிப். 3 முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் தகுதிக்கேற்ப சம்பளம் ₹21,700 – ₹69,100 வரை வழங்கப்படும். முழு விவரம் அறிய <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News January 28, 2025

10 நாளில் ₹10 கோடி சம்பாதித்த கும்பமேளா பியூட்டி?

image

மகா கும்பமேளாவால் நேஷனல் ட்ரெண்டிங் ஆகிவிட்டார் மோனலிசா. தொல்லை தாங்காமல் அவர் ஊருக்கே திரும்பி விட்ட நிலையிலும், அவரை தேடி ஒரு பெரும் கூட்டம் அலைகிறது. இதற்கு மத்தியில்தான் வெறும் 10 நாட்களில் மோனலிசா ₹10 கோடி சம்பாதித்ததாக செய்திகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது. ஆனால், ‘அவ்வளவு சம்பாதித்திருந்தால் நான் ஏன் இன்னும் பூக்களை வியாபாரம் செய்து கொண்டிருக்கப் போகிறேன்’ என மோனலிசா கூறுகிறார்.

News January 28, 2025

BREAKING: தங்கம் விலை தொடர்ந்து சரிவு

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.240 குறைந்துள்ளது. நேற்று 1 சவரன் தங்கம் விலை ரூ.120 குறைந்தது. இதையடுத்து 2ஆவது நாளாக இன்றும் சரிந்துள்ளது. 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,540ஆகவும், 1 சவரன் ரூ.60,320ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,510ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.60,080ஆக விற்பனையாகிறது. SHARE IT.

News January 28, 2025

சென்னை- பிரயாக்ராஜ் ரூ.53,000.. அதிரும் கட்டணம்

image

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய வைபவமான மெளனி அமாவாசை ஸ்நானம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் புனித நீராடினால் மிகவும் புண்ணியம் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி விமான கட்டணமும் பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னை-பிரயாக்ராஜ் இடையேயான இன்றைய கட்டணம் ரூ.53,000 ஆக உயர்ந்துள்ளது. அதுவும் 2 நாளுக்கு முன்பே டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது.

News January 28, 2025

சென்னை வரும் விமானத்தில் இயந்திரக் கோளாறு!

image

லண்டனில் இருந்து சென்னை வருவதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில மணிநேரங்களில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை நடுவானில் விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இன்று மதியம் 12.30-க்கு சென்னைக்கு அந்த விமானம் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

News January 28, 2025

வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பக் கூடாது.. SC உத்தரவு

image

வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பக் கூடாதென்று காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் (SC) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த SC, வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு தளங்கள் மூலம் எந்த நபருக்கும் சம்மன் அனுப்பக் கூடாது என்று ஆணையிட்டது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல்துறைக்கு பொதுவான சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.

News January 28, 2025

வீட்டின் வாசலில் இந்த ‘4’ பொருட்களை வைக்காதீங்க..

image

வாஸ்து சாஸ்திரங்களின் படி, *உடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வீட்டு வாசலில் இருந்தால், அவை எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும் *கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்கள் இருந்தால், வீட்டில் விரும்பத்தகாத நிகழ்வை உருவாக்கும் *வாடிய செடிகள் வாசலில் இருப்பது வீட்டிற்கு துரதிஷ்டத்தை உண்டாக்கும் *கருப்பு நிறத்தில் அடர் நிற பொருட்கள் (மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தை தடுக்கும் எனப்படுகிறது.

error: Content is protected !!