news

News January 2, 2025

வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவதா?

image

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி, வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சாடினார். சமூகத்தில் பெண் என்ற பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும், இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News January 2, 2025

அணியில் இருந்து கழட்டி விடப்படும் ரோஹித்?

image

கேப்டன் ரோஹித் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடைசி 10 இன்னிங்சில் நியூசிலாந்து, BGT தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். கேப்டனாகவும் தொடர் விமர்சனங்கள் எழும் சூழலில், கடைசி BGT மேட்சில் அவர் கழட்டி விடப்படுகிறார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அவருடைய இடத்தில் சுப்மன் கில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ரோஹித் இல்லாதது என்ன இம்பாக்ட்டை அணியில் உண்டாக்கும்?

News January 2, 2025

குஷ்பு, அண்ணாமலை பிரச்னை முடிந்தது

image

கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற பிரச்னை கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் அண்ணாமலைக்கும் குஷ்புவுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

News January 2, 2025

வெள்ளைக் கார்களை விரும்பும் இந்தியர்கள்!

image

கருப்பு மற்றும் நீல நிறக் கார்களை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜடோ டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், 2024இல் விற்பனையான கார்களில் வெள்ளை நிற கார்களே அதிகம் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கார்களின் விற்பனை 2023இல் 39%ஆக இருந்த நிலையில் 2024இல் 39.3%ஆக அதிகரித்துள்ளது. குறைந்த மெயின்டெனன்ஸ் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

News January 2, 2025

வெளிநாட்டு கொய்யா சாப்பிடாதீங்க!

image

நீரிழிவு நோயாளிகள் டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவைச் சாப்பிட வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால், அதில இருக்கிற சர்க்கரை வெகு சீக்கிரமாக ரத்தத்துடன் கலந்துவிடும். அதற்கு மாறாக, நாட்டு கொய்யா, நாட்டு பப்பாளி, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, நாட்டு நாவல் பழம், பேரிக்காய், நாட்டு மாதுளை சாப்பிடும்படி பரித்துரைக்கின்றனர்.

News January 2, 2025

தங்க முதலீட்டாளர்கள் ஹேப்பி. நுகர்வோர் சோகம்

image

2000ஆவது ஆண்டு முதல் தங்கத்தின் விலை சராசரியாக ஆண்டுக்கு 12.2% உயர்வு கண்டிருக்கிறது. சராசரியாக வைப்பு நிதி 6%, ரியல் எஸ்டேட் 8% என்று மட்டுமே உயர்வு பெறும் நிலையில் மற்ற முதலீடுகளை விட தங்கம் சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பயன்பாட்டுக்காக தங்கம் வாங்குவோர், விலை உயர்வால் கடும் அவதியடைந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மட்டும் தங்கம் விலை 23% உயர்ந்தது.

News January 2, 2025

எவனோ நம்ப பையன் தான்….

image

நம் ஊரில் பொருளை வாங்க சாக்குப்பையை தூக்கிட்டு போவாங்க. ஆனால் மாடர்ன் ஜெனரேஷன் அதை விரும்புவதில்லை. ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து புதுசு புதுசாக வாங்குகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் பெண் ஒருவர் பாஸ்மதி அரிசி பையினால் ஆனா பையை மாட்டிக்கொண்டு பர்சேசிங்கிற்கு வந்து இணையத்தை அலறச் செய்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், எவனோ நம்ப பையன் தான் என கமெண்ட் செய்கிறார்கள். ஆனா, இதுவும் நல்லா தான இருக்கு!

News January 2, 2025

முதலீட்டாளர்களை திருப்திபடுத்துமா சந்தை?

image

நடப்பு ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 2ஆவது நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு சென்செக்ஸ், நிஃப்டி முறையே வெறும் 8.17%, 8.8% மட்டுமே ஏற்றம் கண்டன. முதல் அரையாண்டில் நல்ல ரிட்டர்ன் இருந்தாலும், 2ஆவது அரையாண்டில் சந்தை வெகுவாக சரிந்தது. அதே நேரம் தங்கம் 26% லாபம் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் பங்குச்சந்தை மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News January 2, 2025

ஹீரோயின்னு சொல்லி காமெடி ஆக்கிட்டாங்க!

image

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தது குறித்து நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அப்படத்தில் தனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் சொன்னதைபோல இல்லை என்றார். நானும், மீனாவும் கதாநாயகிகள் எனக் கூறியதாகவும், ஆனால் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார். ரஜினிக்கு திடீரென ஹீரோயின் கிடைத்ததால் தனது ரோல் காமெடியானதாகவும் வருந்தினார்.

News January 2, 2025

பாமக சார்பில் ‘Am I Next?’ போஸ்டர்

image

PMK சார்பில் சென்னையின் பல பகுதிகளில் ‘Am I Next?அடுத்தது நானா?’ எனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அடுத்தது நானா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதோடு, திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!