news

News January 2, 2025

மரண தண்டனை அவசியம்தானா?

image

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான விஷயம் எனவும் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சரியான நடைமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

News January 2, 2025

வெடி விபத்துக்கு டெஸ்லா சைபர் டிரக் காரணமில்லை!

image

டெஸ்லா சைபர் டிரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெடி விபத்துக்கு டெஸ்லா சைபர் டிரக் காரணமில்லை என உறுதிப்படுத்தியுள்ளார். வாகனம் வெடித்த நேரத்தில் அனைத்து பாகங்களும் சரியாக செயல்பட்டதாக உயர்மட்ட அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

News January 2, 2025

நியூ இயர் Resolution…நேத்து யாரெல்லாம் Follow பண்ணீங்க

image

காலையில் சீக்கிரமாக எழுவேன், ஜிம் போவேன், மது – சிகரெட்டை கைவிடுவேன், இனி லைப்பில் productive ஆக இருப்பேன் என புத்தாண்டிற்கு முன்பே நான் இப்படியெல்லாம் மாறப்போகிறேன் என resolution லிஸ்ட் போட்டிருப்பீர்கள். நேற்று ஒரு நாள் கடந்தாகி விட்டது. நினைத்த Resolutionஐ நேற்று ஒருநாள் யாரெல்லாம் கரெக்ட்டா பண்ணீங்க. யார் பொங்கல் வரைக்கும் லீவ் விட்டுடீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 2, 2025

அடிச்சது எல்லாருமே டான் தான்!! யார் என தெரியுதா?

image

இவரை அதற்கு முன் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், ஒரே ஒரு படம் தான், இந்திய சினிமாவில் முக்கிய டானாக உயர்ந்தார். படத்தின் பார்ட் 2 இந்தியளவில் பெரும் வெற்றியை பெற்று, இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து இப்படியொரு படமா என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இன்றைய பான் இந்திய ஸ்டார்களில் முக்கிய நடிகராக இருக்கும் இவரை இன்னுமா யார் என தெரியவில்லை.

News January 2, 2025

சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

image

மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, SSY, SCSS ஆகிய திட்டங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வட்டியே ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படவுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் சிறு சேமிப்பு வட்டியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

News January 2, 2025

SV சேகரின் சிறை தண்டனை உறுதி

image

நடிகர் S.V.சேகரின் ஒரு மாதகால சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஒருமாத காலம் சிறை தண்டனை விதித்திருந்தது. அதனை எதிர்த்து SV சேகர் தொடர்ந்திருந்த மேல் முறையீட்டு வழக்கில், சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

News January 2, 2025

நியூ இயர் போஸ்டருடன் வந்த பிசாசு 2 ரிலீஸ் அப்டேட்

image

மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட காலமாக வெளிவராமல் இருக்கும், பிசாசு 2 படம் வரும் மார்ச் 2025ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சலித்து போன பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான படமாக வந்து மக்களை கவர்ந்தது பிசாசு என்பது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

வாள்வீச்சில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!

image

தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, கேரள வாள்வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தேசிய அளவில் அவர் வென்ற 12வது பதக்கம் இது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஃபென்சர் பவானி தேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

தமிழகத்தில் பரவும் ‘Scrub Typhus’ நோய்

image

தமிழகத்தில் பரவும் ‘Scrub Typhus’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. Orientia tsutsugamushi என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் இந்த நோய், உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்களை ஏற்படுத்தும். விவசாயிகள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோரை இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News January 2, 2025

விஜய், சமந்தாவுக்கு முன்னாடியே தெரியும்!

image

தனது காதல் விஷயம் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விஜய், சமந்தா, அட்லீ, ப்ரியா, கல்யாணி, ஐஸ்வர்யா லஷ்மி என வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றார். தான் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே ஆண்டனியை காதலிக்க தொடங்கியதாகவும், தங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்தவரை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!