India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹமாஸ் படையினருக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனம் உருக்குலைந்து போயுள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், வீடு மற்றும் உறவுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முவாசி பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை பயங்கர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹1,365 கோடி உண்டியல் காணிக்கை வரப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும்
2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடகள வீராங்கனை அன்னு ராணி, செஸ் வீராங்கனை வந்திகா அகர்வால், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன், நிதேஷ்குமார் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பவாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அஜித் பவாரின் தாயார் அஷதை பவார் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது உறவினரும், NCP மூத்த தலைவருமான பிரபு படேலும் இந்த கருத்தைக் கூறியிருந்த நிலையில், NCP மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டிச.12ம் தேதி 84ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சரத் பவாரிடம் அஜித் பவார் தனது மனைவியுடன் நேரில் சென்று ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, ரேஷன் அட்டைதாரர்கள் சுய விவரங்களை (KYC) அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு, ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இதற்கான காலக்கெடு டிச.31 உடன் முடிவடைந்த நிலையில், அவகாசத்தை இன்னும் சில நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. எனவே இதனை விரைந்து முடிப்பது நல்லது.
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் ஹீரோ, ரியல் ஃலைப்பில் நடந்த ஸ்வீட்டான அப்டேட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான அவர், அழகு, அம்மன், கயல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 13 ஆண்டுகளாக காதலித்த தெரசாவை கடந்த ஆண்டு கைப்பிடித்தவர், தற்போது அப்பாவாக உள்ளார். இவரது தங்கை அன்ஷிதா தான் பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா.
சின்ன வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து, பெருமளவு குறைந்ததே இதற்கு காரணம். கோயம்பேடு மொத்த சந்தையில் 4 நாட்களுக்கு முன்பு வரை கூட ரூ.70-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று ரூ.130-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.150 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய இவ்விருது, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கும், ஒலிம்பிக் துப்பாக்கிச்சூடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமாரும் கேல் ரத்னா விருது பெறுகின்றனர்.
உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 2050-க்குள் 31 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும், இதன் மூலம் முஸ்லிம் மக்கள்தொகையில் இந்தோனேசியாவை இந்தியா முந்தும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் சராசரி வயது 28-க்கு கீழே இருப்பதும், அதிக கருவுறுதல் விகிதம் இருப்பதுமே இதற்கு காரணமாம்.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 387 (1.67%) புள்ளிகளும் சென்செக்ஸ் 1,218 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. புத்தாண்டையொட்டி பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.