news

News January 2, 2025

#GameChangerTrailer கேட்டு ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்

image

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “GameChanger” ட்ரெய்லர் மாலை 5:04-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ராம்சரண் ரசிகர்கள் #GameChangerTrailer என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 129K posts பதிவானதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

News January 2, 2025

காலையில் உதவி.. மதியம் பிசினஸ்.. இரவில் கொள்ளை

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது. காலையில் நலத் திட்ட உதவிகளை வழங்கும் ஞானசேகரன், பிற்பகலில் பிரியாணி பிசினஸ் செய்ததும், இரவில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. பள்ளிக்கரணை போலீசார் அவரை நெருங்கியபோது, மாணவி வன்கொடுமை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News January 2, 2025

யார் யாருக்கு எவ்வளவு போனஸ்

image

➤C & D Group பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு<<15046427>> ₹3000 ➤தொகுப்பூதியம்<<>>, சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், 2023 -24ஆம் நிதியாண்டில் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ₹1000, ➤C & D Group ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் VO, கிராம உதவியாளர்களுக்கு ₹500 போனஸ் வழங்கப்படும்.

News January 2, 2025

ஓப்பனிங்கில் களமிறங்கும் ராகுல்

image

டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்ல வேண்டும் என்றால், கடைசி டெஸ்ட்டில் வெற்றிபெறுவது மிக முக்கியம். இந்த சூழலில் மோசமான பார்ம் காரணமாக, ரோஹித் விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதில் ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதேபோல், காயத்தால் அவதியடைந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News January 2, 2025

பாமக எம்எல்ஏ அருள் கைது

image

சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ அருள் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், இதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சௌமியாவை, போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

மௌன சாமியாராக முதல்வர்: இபிஎஸ் சாடல்

image

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தை சுட்டிக்காட்டும் அதிமுகவிற்கு பதிலளிப்பதை விடுத்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை திமுக காப்பாற்ற முயல்வதாக சாடியுள்ள அவர், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மௌன சாமியாராக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

பொங்கல் பரிசு ரூ.2000 வேண்டும்: ஐகோர்ட்டில் மனு

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் சேர்த்து ரூ.1000 வழங்கப்படும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ரூ.1000 கிடையாது என அரசு அறிவித்துவிட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

News January 2, 2025

அதிமுக நிர்வாகி நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன்

image

அதிமுக நிர்வாகி CTR.நிர்மல்குமாருக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் மின்கசிவு என பொய் தகவல்களை பரப்பியதாக, நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நிர்மல் குமார் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.

News January 2, 2025

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!

image

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் C மற்றும் D பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 163.81 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

News January 2, 2025

BREAKING: கேப்டனாக பும்ரா நியமனம்

image

ஆஸி., அணிக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் IND மோசமாக விளையாடியதால், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கடைசி போட்டியில் இருந்து ரோஹித் விலகியுள்ளார். அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!