news

News January 2, 2025

புதாதித்ய ராஜயோகம்: குபேரனாக போகும் 3 ராசிகள்!

image

புதன் – சூரிய பகவான் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம், 3 ராசிக்காரர்களை குபேரன் போல மாற்றும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, மேஷம், துலாம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இனி பணப் பிரச்னை நீங்கும். சிக்கலில் இருந்த பணம் வீடு தேடி வரும். முதலீடு நல்ல லாபத்தை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகிழ்ச்சி பல மடங்கு பெருகும். உடல்நலனில் கவனம் தேவை.

News January 2, 2025

புத்தாண்டு கொண்டாட்டம் இப்படியாக மாறியுள்ளது

image

இந்த தலைமுறையினரிடம் நியூ இயர் கொண்டாட்டங்கள் மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பார், பப் என்பது மட்டுமில்லாமல் இறை வழிபாட்டிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காசி, அயோத்தி, திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் டிச.31 மற்றும் ஜன.1 லட்சக்கணக்கான மக்கள் கூடியதே இதற்கு உதாரணம். சுருக்கமாக சொல்வதானால் ஆங்கில புத்தாண்டு இந்தியமயமாக மாறியுள்ளது.

News January 2, 2025

தடையை மீறி போராட்டம்: அண்ணாமலை

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் நாளை மதுரையில் ‘நீதி கேட்பு பேரணி’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை மதுரையில் நீதி கேட்பு பேரணி நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். போலீசார் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

பிப்.1ம் தேதி ஊரக திறனாய்வுத் தேர்வு

image

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வுத் தேர்வு பிப்.1ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

News January 2, 2025

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ டைரக்டரின் அடுத்த படம் அறிவிப்பு

image

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் எழுத, சிதம்பரம் இயக்க மட்டுமே உள்ளார். இப்படமும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. இதில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை!

image

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் டாஸ்மாக் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜன.15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜன.26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. மதுப்பிரியர்களே தேதியை குறிச்சு வெச்சிக்கோங்க..

News January 2, 2025

ரூ.4.2 கோடி- இந்தியா நிதியுதவி

image

தெற்கு பசிபிக் நாடான வனுவாட்டில், 7.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் டிச.17 நிகழ்ந்தது. 14 பேர் பலியாகினர். 200 பேர் காயமுற்றனர். ஏராளமான கட்டடங்கள் சேதமாகின. இந்திய- பசிபிக் தீவுகள் கூட்டமைப்பில் உறுப்பினர் என்பதால் அந்நாட்டின் புனரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.4.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது மத்திய அரசு. இயற்கை பேரிடர் காலங்களில் வனுவாட்டுக்கு இந்தியா அடிக்கடி உதவியுள்ளது.

News January 2, 2025

பூச்சி கடித்த பெண்ணுக்கு ₹1.1 லட்சம் இழப்பீடு

image

கர்நாடகாவில் தனியார் ஆம்னி பஸ்ஸில் பயணித்த போது பூச்சி கடித்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹1.1 லட்சம் இழப்பீடு வழங்க, பஸ் நிறுவனத்திற்கு தக்‌ஷின கன்னடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் நடந்த சம்பவத்தால், தான் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் வருமான இழப்பையும் சந்தித்ததாக திவ்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

News January 2, 2025

அர்ஜுனா விருது வென்ற 3 தமிழ் வீராங்கனைகள் யார்? (1/2)

image

2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள பேட்மிண்டன் வீராங்கனை துளசி மணி முருகேசன், கால்நடை மருத்துவ மாணவர் ஆவார். அவரது இடது கை பிறவி குறைபாடு, அதன் விளைவாக கட்டைவிரல் இழப்பு மற்றும் பெரும் விபத்து ஆகியவை துளசியை முடக்கிவிடவில்லை. பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயர் பெற, மேற்கூறிய தடைகளே அவருக்கு உந்துதலைக் கொடுத்தன.

News January 2, 2025

அர்ஜுனா விருது வென்ற 3 தமிழ் வீராங்கனைகள் யார்? (2/2)

image

மணிஷா ராமதாஸ், தனது 11 வயதில் கெரியரை தொடங்கியவர். கடின உழைப்பால், 2022ல் ஜப்பானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். அதேபோல், 36க்கும் அதிகமான சர்வதேச மெடல்களை வாங்கிக் குவித்த நித்யஸ்ரீ சிவனுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உயரத்தை பற்றி கேலி பேசியவர்கள் மத்தியில், தனது திறமையால் மிக உயரமான இடத்திற்கு சென்றவர் நித்யஸ்ரீ.

error: Content is protected !!