India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதற்கு நேரமில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் அவர் பங்கேற்று, கங்கையின் புனித நீராடுவதுபோல், புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இது உண்மையான புகைப்படம் இல்லை. AI மூலம் உருவாக்கப்பட்டது என Fact Check மூலம் தெரியவந்துள்ளது.
டிக்டாக்கின் அமெரிக்க வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, சீன நிறுவனமான டிக்டாக்கை தடை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த போதே, அச்செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அப்போதே அதை வாங்க மைக்ரோசாஃப்ட் ஆர்வம் காட்டியது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பந்து வீச்சில் சஞ்சு ஆட்டமிழந்திருந்தார். இன்றைய போட்டியிலும் 3 ரன்களில், ரஷித்திடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த போட்டியில் அதிரடி காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
➤மேஷம் – சினம் ➤ரிஷபம் – அசதி ➤மிதுனம் – கீர்த்தி ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – பெருமை ➤கன்னி – மேன்மை ➤துலாம் – இரக்கம் ➤விருச்சிகம் – தொல்லை ➤தனுசு – நலம் ➤மகரம் – நட்பு ➤கும்பம் – பகை ➤மீனம் – புகழ்.
ஒரு வயது குழந்தையை, அதன் தந்தை மேலே காற்றில் சற்று தூக்கிப் போட்டு பிடிக்கும் போது, அந்த குழந்தை அச்சப்பட்டு அழுவதில்லை. மாறாக, சிரித்துக் கொண்டே இருக்கிறது. தன் தந்தை தன்னை பிடித்துவிடுவார் என்பதில், குழந்தைக்கு எப்போதும் சந்தேகம் ஏற்படுவதில்லை. இதற்கு பெயர் தான் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ENG 171 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய IND ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. IND அணியில் ஹர்திக் 40 ரன்கள் எடுத்தார்.
தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சாய் பல்லவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு படமான ‘தண்டேல்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்காத நிலையில், இது தெரிய வந்துள்ளது. காய்ச்சல், தலைச்சுற்றல் காரணமாக அவர் பங்கேற்கவில்லை என படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார்.
ENG-க்கு எதிரான 3வது T20யில் இந்தியா திணறி வருகிறது. சஞ்சு சாம்சன் 3 ரன்களில் அவுட் ஆக, அபிஷேக் சர்மா, சூர்யகுமார், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் குறைந்த ரன்களில் வெளியேறினர். தற்போது ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் களத்தில் இருக்கின்றனர். இதில் ஹர்திக் மட்டும் அவுட்டானால் IND வெற்றிபெறுவது மிகவும் கடினம். அதுவும் வெற்றிக்கு இன்னும் 46 பந்துகளில் 87 ரன்கள் தேவை.
*வாய்விட்டு சிரிக்கையில் *குழந்தையை கொஞ்சும் போது *செல்லப் பிராணியுடன் விளையாடும் போது *அன்புக்குரியோரை அன்புடன் கட்டி அணைக்கும் போது அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடும் போது *அன்புக்குரியோருடன் கைகோர்த்து நடக்கும் போது *எப்போதும் நேர்மறை மனநிலையுடன் இருக்கும்போது *கடந்த காலத்தில் வாழாமல் நிகழ்காலத்தில் வாழும் போது… ரத்த ஓட்டம் சீராகி, உங்கள் BP குறையும், மாரடைப்பு வரும் ஆபத்தும் குறையும்.
மாநிலம் முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் இரண்டு அமுதம் அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் விரைவில் திறக்கப்படும். இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,500 வரை சேமிப்பு ஏற்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசி விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.