India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக ஜி. வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார். அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகிகளாக எம்.கே. செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம். பாலுவை நியமித்தும் அவர் ஆணையிட்டுள்ளார். கட்சி பதவியிலிருந்து ஜி.வெங்கடாச்சலம் விடுவிக்கப்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை.
இது பலரது வயிற்றில் புளியை கரைக்கும் செய்திதான். நாட்டில் உள்ள லாரி டிரைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (55.1%) மங்கலான கண் பார்வையை உடையவர்கள் என்பது டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 44.3% பேர் சராசரி உடல் எடையை விட அதிகமாக உள்ளதும், 57.4% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், 18.4% பேருக்கு ரத்த சர்க்கரை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை இபிஎஸ்-இன் மகன் மிதுன் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் இபிஎஸ்-இன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ஐடி ரெய்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பின்போது அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் அமித் ஷா தமிழகம் வரும் நிலையில், 90% கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வுப் பணியின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, மக்களிடம் இருந்த வந்த காேரிக்கை அடிப்படையில் புதிதாக 2,500 முழு நேரம் மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
நடிகர் அல்லு அர்ஜுன் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2’ படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படம் கடவுள் கார்த்திகேயனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இன்றும், நாளை மறுதினமும் பத்திரப்பதிவுக்கு 50% கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் என நம்பப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அந்தவகையில் இன்றும், நாளை மறுதினமும் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் CEO பதவியிலிருந்து ஜெப் அலார்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டி வருமானம் தவறாக கையாளப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, ராஜினாமா செய்துள்ளார். எனினும் இது உறுதிபடுத்தப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டி துவங்கவுள்ள நிலையில், இவரின் ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.
சினிமா மீது இசையமைப்பாளர் லியோன் அளவு கடந்த மரியாதை வைத்திருப்பதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ‘டிராகன்’ படத்தின் “ஏன்டி விட்டுப்போன…” பாடல் நேற்று வெளியானது. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், லியோனின் தந்தை நேற்று முன்தினம் காலமானதாகவும், பாடல் வெளியீட்டை தள்ளி வைக்காமல் தந்தையின் இறுதிச்சடங்குகள் நடக்கும் வேளையில், தனது அறையில் பாடல் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
சென்னையில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்பயிற்சி ஆசிரியரை போலீஸ் கைது செய்துள்ளது. எம்கேபி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பெண் ஒருவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தார். குடியரசு தினத்தன்று தனி அறையில் வைத்து அவருக்கு இன்னொரு உடற்பயிற்சி ஆசிரியர் அறிவழகன் தொல்லை அளித்துள்ளார். புகாரின்பேரில் அறிவழகனை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
1999 கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவ நிலைகளை கண்டறிய அமெரிக்காவுக்கு சொந்தமான ஜிபிஎஸ் நேவிகேஷனை இந்தியா கேட்டது. ஆனால், இக்கட்டான அத்தருணத்தில் அமெரிக்கா நமக்கு ஜிபிஎஸ்-ஐ தரவில்லை. இதையடுத்து, பல ஆண்டு கால உழைப்புக்கு பிறகு இந்தியாவே சொந்தமாக IRNSS என்ற நேவிகேஷனை உருவாக்கியது. இந்த நேவிகேஷனை விட பல மடங்கு துல்லியமான SPS-ஐ உருவாக்கவே தற்போது NVS 02 சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.