India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 31ஆம் தேதி 365, பிப்.1இல் 445 பஸ்கள், கோயம்பேட்டில் இருந்து 120, மாதவரத்தில் இருந்து 20, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 250 பஸ்கள் இயக்கப்படும்.
16 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், மைனராக இருந்தாலும் கருவை கலைப்பது பற்றி சிறுமியே முடிவெடுக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கருவுற்றால், அதனை கலைக்க கார்டியனின் அனுமதி அவசியம் என சட்டம் இருக்கும் நிலையில், ஐகோர்ட் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. ஜன.31 – பிப்.13, மார்ச் 10 – ஏப்.4 வரை 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், பிப்.1ம் தேதி 2025 – 26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு அமைப்பு உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. உங்க எதிர்பார்ப்பு என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
முகமுடி, மாயாவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் இணைந்து தேவா படத்தில் நடித்துள்ளார். இதில் 2 பேரும் உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பியுள்ளது. இக்காட்சியை பார்த்த தணிக்கை குழு, முத்தக்காட்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி, வெட்டிவிட்டு யு,ஏ சான்று அளித்துள்ளது.
கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். விஐபிக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததோடு, சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறிய அவர், பல கோடி ரூபாய் செலவிட்டு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கண்டித்தார். மற்றுமோர் அசம்பாவிதம் நடக்காதபடி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் 2028 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை அமைக்க ஹோண்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக 29 வகையிலான பைக்குகளை உற்பத்தி செய்யவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 100 சிசி பைக்குகளுக்கு நிகராக 4kWh திறன் கொண்ட பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி, நிலுவையில் உள்ள மத்திய அரசின் திட்டங்கள், தமிழ்நாட்டிற்கான தேவைகள் குறித்து எடுத்துரைக்க எம்பிக்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையில் (IAF) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஃப்ளையிங், கிரவுண்டு டியூட்டி, என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி ஆகியவற்றில் 336 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சிக் காலத்தில் ரூ.56,100-ம், பயிற்சி முடிந்த பின்னர் ரூ.1,77,500 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://careerindianairforce.cdac.inஇல் பார்க்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,510க்கும், 1 சவரன் தங்கம் ரூ.60,080க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.7,595க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.680 உயர்ந்து, ரூ.60,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் சுமார் 16 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், பெரம்பலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களை விட நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊரில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா?
Sorry, no posts matched your criteria.