news

News January 3, 2025

பொங்கலுக்கு வருமா விவசாயிகள் ஆப்?

image

அறுவடைக்குப் பின் விளை பொருள்களை பாதுகாக்க, TN முழுவதும் உள்ள பதப்படுத்தும் நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை அறிய, ‘டி.என்.எபெக்ஸ்’ நிறுவனம் செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலி மூலம் விவசாயிகள் அறுவடைக்குப் பின், அருகில் உள்ள கிடங்குகள் விவரம் அறிந்து உரிய விலை கிடைக்கும் வரை, விளை பொருள்களை அதில் பாதுகாக்கலாம். இதனை பொங்கலுக்கு செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

News January 3, 2025

“நீட் குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்”

image

நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும் என்று உச்சநீதி​மன்​றத்​தில் மத்திய அரசு உறுதி அளித்​துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில், தேர்வை வழக்​கமான வினாத்​தாள் அடிப்​படை​யில் நடத்​தலாமா, ஆன்லைனில் நடத்​தலாமா என்பது குறித்து விரை​வில் முடிவு எடுக்​கப்​படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

News January 3, 2025

கழட்டி விடப்பட்டாரா ரோஹித்?

image

BGT 5வது டெஸ்டில் ரோஹித்துக்கு பதிலாக பும்ரா டாஸ் போட வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் எனவும், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அவை உண்மையாகி, அவர் அணியில் இல்லாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பும்ரா சொன்னது போல் ரோஹித் ஓய்வில் உள்ளாரா (அ) கழட்டி விடப்பட்டாரா என்பது விவாதமாகியுள்ளது.

News January 3, 2025

ஜன.3: வரலாற்றில் இன்று

image

▶1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
▶1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
▶1831 – சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் புலே,
▶1989 – பின்னணிப் பாடகி சைந்தவி பிறந்த நாள்
▶1993 – நடிகை நிக்கி கல்ரானி பிறந்த நாள்

News January 3, 2025

SHOCKING: அணியில் இருந்து வெளியேறிய ரோஹித்!

image

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக டாஸ் போட வந்தார். ரோஹித் விருப்ப ஓய்வு எடுத்துள்ளதாகவும், அவர் கூறினார். ரோஹித்துக்குப் பதிலாக கில் இறுதி அணியிலும், ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக பரிசித் கிருஷ்ணாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

News January 3, 2025

செல்வாக்கை மீட்க துடிக்கும் இபிஎஸ்: அமைச்சர் தாக்கு

image

தனது கட்டுபாட்டில் இருந்து அதிமுக கை நழுவி போய்விடுமோ என EPS அச்சத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். EPS மட்டமான அரசியல் செய்வதாகவும், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்புபவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 3, 2025

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 54 பேர் பலி

image

காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 54 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காசா நிர்வாகம் கூறியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் பதுங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் கொதித்துள்ளது. இதனிடையே, தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

News January 3, 2025

இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

image

நடப்பாண்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹249.76 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை TN அரசு வழங்க உள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதில், பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

News January 3, 2025

தமிழக பாஜக தலைவர் மாற்றம்?

image

TN பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து அமைப்பு தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட, மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!