news

News January 3, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 68 பேர் பலி

image

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய அடுத்த நாளே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் போலீஸ் உள்ளிட்ட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காசாவில் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.

News January 3, 2025

பள்ளிப் பாடத்தில் தேசத் தந்தையின் பெயர் திருத்தம்

image

வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் பெயரைப் பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது தற்காலிக அரசு. 1971 மார்ச் 26ஆம் தேதி, விடுதலையை அறிவித்த முஜிபுரின் பெயரை நீக்கிவிட்டு, ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாகத் திருத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சி மாற்றத்திற்கு காரணமான இடஒதுக்கீடு போராட்டத்தின் போது முஜிபுரின் சிலை, ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 3, 2025

வங்கியில் 1267 பணியிடங்கள்: ₹63,840 வரை சம்பளம்

image

பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ₹36,000 – ₹63,840 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News January 3, 2025

இன்று ஒரு நாள் இப்படி செய்து பாருங்கள்….

image

⇢ நாளை பார்த்து கொள்ளலாம் என நினைத்த காரியத்தை உடனே செய்து முடியுங்கள் ⇢ நீங்கள் சண்டையிட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள் ⇢ கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள் ⇢ தெரியாத ஒருவருக்கு ஒரு சின்ன உதவியை செய்யுங்கள் ⇢ ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள் ⇢ செல்போன் அல்லாமல் நேரில் சென்று நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நிச்சயமாக மனதில் மகிழ்ச்சி நிறையும். ட்ரை பண்ணுங்க

News January 3, 2025

நிதீஷ்குமாருக்கு லாலு பிரசாத் அழைப்பு

image

INDIA கூட்டணியில் வந்து சேர்ந்துக் கொள்ளுமாறு பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 12 இடங்களும் நிதீஷின் JDU 12 இடங்களும் பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சியமைத்துள்ளன. இந்நிலையில், லாலுவின் அழைப்பு தொடர்பான கேள்விக்கு நிதீஷ்குமார் பதிலளிக்காமல் சென்றார்.

News January 3, 2025

ரோஹித்துக்கு பதிலாக வந்து சொதப்பிய கில்

image

ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சுப்மன் கில், லயன் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 20(63) ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 57-3 ரன்கள் தடுமாறி வருகிறது. களத்தில் கோலி 12 (48) இருக்கிறார்.

News January 3, 2025

தடையை மீறி போராடவிருக்கும் பாஜக

image

அண்ணா பல்கலைக்கழைக வன்கொடுமையை எதிர்த்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக பாஜக அறிவித்திருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னையில் போராடிய அதிமுக, பாமக, நாதக ஆகியோர் கைதான நிலையில், இன்று பாஜகவினர் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News January 3, 2025

கடந்த 10 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

image

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் 10% அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2014-15ஆம் நிதியாண்டில் 47.15 கோடியாக இருந்த வேலை வாய்ப்புகள், 2023-24ஆம் நிதியாண்டில் 64.33 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். கடந்த நிதியாண்டில் மட்டும் 4.60 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News January 3, 2025

BGT 5வது டெஸ்ட்: ஓப்பனிங்கில் காலியான 2 விக்கெட்

image

சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்டில் தொடக்கத்திலேயே இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ராகுல் (4), ஜெய்ஸ்வால் (10) ரன்களுடன் முதலில் அவுட்டாகினர். தற்போது கோலி(8), கில்(9) விளையாடி வருகிறார்கள். 11 ஓவர்களில் இந்திய ஸ்கோர் 32/2.

News January 3, 2025

AI உதவியுடன் தமிழ் மொழி மேம்பாடு: அமைச்சர் பிடிஆர்

image

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் உலகில் பரவலாக தமிழ் மொழியை விரிவுபடுத்தவும் முடியும் என்கிற வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ‘பாஷினி’ செயலி மூலம் PM மோடியின் உரைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.

error: Content is protected !!