news

News January 30, 2025

உங்களை வெற்றியாளராக மாற்றும் ‘5’ பழக்கங்கள்

image

*நேர மேலாண்மை: நேரத்தை கவனத்தில் கொண்டு தெளிவாக பயணிக்க வேண்டும். *விடாமுயற்சி: வெற்றி ஒரே நாளில் வந்துவிடாது. ‘Over-Night’ வெற்றிக்காக ஒருவர் பல இரவுகள் கடினமாக விடாமுயற்சியுடன் உழைத்தாக வேண்டும் *தெளிவு: நீங்கள் எதனை குறிவைத்து பயணிக்கிறீர்கள் என்ற தெளிவு மிக அவசியம் *நேர்மை: குறுக்கு வழியைத் தேடாமல், நேர்மை தவறாமல் இருத்தல் மிகவும் முக்கியம் *ரிஸ்க் எடுக்க எப்போதும் தயங்க வேண்டாம்.

News January 30, 2025

முடிவுக்கு வருமா ‘பராசக்தி’ பஞ்சாயத்து?

image

‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் சூடுபிடித்துள்ளது. SK – விஜய் ஆண்டனி இருவருக்குமே இது 25வது படம். AVM நிறுவனம் படத்தின் தலைப்பை தமிழ் தலைப்பை SK படத்தை தயாரிக்கும் Dawn Picturesக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பெயர் உரிமம் தெலுங்கில் யாரிடம் உள்ளது என்பது தான் கேள்வியே? ஜுலை, 2024ல் படத்தலைப்பை தெலுங்கில் பதிவு செய்ததாக விஜய் ஆண்டனி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. யார் விட்டுக்கொடுப்பது!

News January 30, 2025

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது… அண்ணாமலை பேட்டி

image

திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு முழுமுதற் காரணம் PM மோடிதான் என்று கூறினார். சென்னையில் திமுக காெடியுடன் பெண்களை காரில் சிலர் துரத்தியதே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் சாடினார். அண்ணாமலை தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

News January 30, 2025

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று!

image

என் வாழ்க்கையே எனது செய்தி! எனக் கொண்ட கொள்கையில் உறுதியையும், அறப்போராட்டத்தையும் தன் வாழ்க்கையாகக் கொண்ட தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவுதினம் இன்று! இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு என்றவரை, கோட்சே 1948 ஜனவரி 30 டெல்லி பிர்லா மாளிகையில் சுட்டுக்கொன்றது இன்றுதான். இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம்.

News January 30, 2025

தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.. நடிகை புகார்

image

அமிர்கானின் தங்கல் படத்தில் அவரின் மகளாக நடித்து புகழ் பெற்றவர் பாத்திமா சனா ஷேக். அவர் அளித்துள்ள பேட்டியில், தெலுங்கு படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், இதற்காக படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தபோது அவர் படுக்கைக்கு வெளிப்படையாக அழைத்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்து வெளியே வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

News January 30, 2025

எத்தனால் விலையை உயர்த்தியது மத்திய அரசு

image

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் எத்தனாலுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, லிட்டர் ஒன்றுக்கு ₹56.58இல் இருந்து ₹57.97ஆக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News January 30, 2025

திமுக அரசு கும்பகர்ண தூக்கம்.. அதிமுக காட்டம்

image

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் திமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் உள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி EX அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையினர் அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக இருந்ததாகவும், ஆனால் திமுக ஆட்சியில் அவர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் சாடினார்.

News January 30, 2025

தனிநபர் வருவாய் 171% உயர்வு: TN அரசு

image

தேசிய அளவில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் 171% ஆக உயர்ந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் அறிக்கையில், இந்திய அளவில் 2ஆவது பெரிய மாநிலமாக தமிழகம் உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழக பங்கு 1960-61இல் 8.7ஆக இருந்த நிலையில், 2023-24இல் 8.9%ஆக அதிகரித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் TN அரசு கூறியுள்ளது.

News January 30, 2025

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

image

கல்லூரி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ₹12,000, ₹15,000, ₹25,000 என 3 பிரிவுகளாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை பெறும் விண்ணப்பத்தை, https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_90_ms_2024.pdf என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம். இன்று முதல் பிப்.28 வரை https://ee.kobotoolbox.org/x/nMU1hMpq என்ற இணைப்பில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

News January 30, 2025

ஆயுள் வளர்க்கும் ஆழ்ந்த சுவாசம்

image

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளில் ஒன்று ஆழ்ந்து மூச்சுவிடுதல். நீங்கள் ஆழ்ந்து மூச்சுவிடும் போது ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது, படபடப்பு குறைகிறது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைவதுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் இது நுரையீரலுக்கு பயிற்சியாக அமைவதுடன், உடல், மன ஆற்றல்களை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது.

error: Content is protected !!