news

News January 30, 2025

வரி செலுத்துவோர் எச்சரிக்கையாக இருங்கள்!

image

ஜிஎஸ்டி, விதிமீறல், வரி ஏய்ப்பு தொடர்பாக மோசடியாக அனுப்பப்படும் நோட்டீஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு, வரி செலுத்துவோரை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மோசடி பேர்வழிகள் போலி ஆவண அடையாள எண் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்மனை பெற்றதும் சிபிஐசி இணையதளத்தில் சரிபார்த்து, போலி எனத் தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

News January 30, 2025

1998ல் காணாமல் போனவரை அகோரியாக கண்ட மனைவி!

image

பல ஆச்சரியங்களை கொடுத்து வருகிறது மகா கும்பமேளா. 1998 இல் காணாமல் போன தனது கணவர் கங்காசாகரை ஜார்க்கண்டைச் சேர்ந்த மனைவி தன்வா தேவி மகா கும்பமேளாவில் கண்டுபிடித்துள்ளார். நெற்றியில் இருக்கும் வடு, கால்முட்டி தழும்பை வைத்து கும்பமேளாவில் பார்த்த பாபா ராஜ்குமார் தான் கங்காசாகர் என உறுதியாக கூறுகிறார்கள். இதை பாபா ராஜ்குமார் ஏற்க மறுக்க, DNA டெஸ்ட் எடுக்க குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

News January 30, 2025

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிக்கொலை

image

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக்கொலை செய்தது. தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தனுஷின் சடலத்தைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதார். நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 30, 2025

அதிக நேரம் போன் யூஸ் பண்றீங்களா…உஷார்!

image

ஒரு நாளில் போன்களை 6 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்துபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 25% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை European Heart Journal – Digital Health வெளியிட்டுள்ளது. அதிக நேரம், போன் பயன்பாடும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் வாழ்க்கை முறையும் மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால், கவனமாக இருங்கள்! SHARE IT!

News January 30, 2025

நமல் ராஜபக்ச குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

image

ஊழல் வழக்கில் இலங்கை EX PM மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015இல் இந்திய முதலீட்டில் இருந்து வந்த பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2016 ஜூனில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

மீசை ராஜேந்திரனை வாழ்த்திய ரஜினி

image

உடல் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனை, ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். நடிகரும், தேமுதிக பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தனது பிறந்தநாளையொட்டி, TN அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதையறிந்த பிரேமலதா விஜயகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு, ரஜினிகாந்தும் வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 30, 2025

டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

image

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் PM மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31 – பிப்.13 மற்றும் மார்ச் 10 – ஏப்.4 வரை என 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

News January 30, 2025

1 கிலோ தேங்காய் ரூ.100.. இதுதான் காரணம்

image

சென்னை காேயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கிலோ ரூ.100ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 டன் தேங்காய் கொண்டு வரப்படும். கடந்த சில வாரங்களாக 70 டன் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதனால் தேங்காய் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. சில்லரையில் ஒரு தேங்காய் ரூ.35-ரூ.40 வரை விற்கப்படுகிறது. உங்கள் பகுதியில் தேங்காய் விலை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.

News January 30, 2025

தமிழ்நாடு அரசுக்கு ₹495 கோடி மிச்சம்

image

வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகம்(FCI) மூலமாக 1 கிலோ அரிசியை, ₹28க்கு TN அரசு வாங்குகிறது. இதன் விலையை, ₹22.50ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால், மாநில அரசுக்கு ₹495 கோடி மிச்சமாகிறது. 2.21 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறது. இதற்கு மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான, 2.04 லட்சம் டன் அரிசியை, FCI இலவசமாக வழங்குகிறது.

News January 30, 2025

உங்களின் ‘ஐந்து பேர்’ யார்?

image

நீங்கள் எந்த ஐந்து பேருடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் விளங்குவீர்கள் என்ற ஒரு வாக்கியம் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம் எண்ணத்தை தீர்மானிக்கிறார்கள். உத்வேகம் தரும் நபர்களை கண்டறியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் மனிதர்களுடன் நீங்கள் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படியானவர் உங்களுக்கு இருக்கிறாரா?

error: Content is protected !!