news

News January 31, 2025

‘பராசக்தி’ படமும் உண்மை சம்பவமா?

image

‘அமரன்’ படத்தை போலவே SKன் ‘பராசக்தி’ படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1965ல் ஹிந்தி திணிப்பை எதிர்த்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் பேரணி நடத்தினர். அதில் போலீசார் தாக்குதலில், ராசேந்திரன் என்ற மாணவன் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அந்த கேரக்டரில் தான் SK நடித்து வருவதாக கூறப்படுகிறது.

News January 31, 2025

டிஎஸ்பி ஆனார் தீப்தி சர்மா

image

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உ.பி மாநிலம் மொராதாபாத் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.

News January 31, 2025

DeepSeek-யிடம் Way2News கேட்ட கேள்வி

image

சீன AI மாடலான DeepSeek-ஆல் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அது குறித்து DeepSeek-யிடம் Way2News கேள்வி கேட்டது. அதற்கு, தன்னால் எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், பயனர்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே தான் வடிவமைக்கப்பட்டதாகவும் அது பதிலளித்துள்ளது. தன்னிடம் ஹேக்கிங், கண்காணிப்பு, தாக்குதல் திறன் இல்லை எனவும் உறுதியளித்துள்ளது.

News January 31, 2025

குடும்பஸ்தன் படக்குழுவை பாராட்டிய பா. ரஞ்சித்

image

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. படக்குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய பா.ரஞ்சித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

News January 31, 2025

டெல்லியில் கடும் குளிரால் 474 பேர் பலி

image

தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் கடந்த 56 நாட்களில் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News January 31, 2025

‘பராசக்தி’ என்றதும் நினைவில் வருவது யார்?

image

விஜய் ஆண்டனியின் 25 ஆவது படத்திற்கு தமிழை தவிர பிற மொழிகளில் ‘பராஷக்தி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதே போல, சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்திற்கும் ‘பராசக்தி’ எனப் பெயரிடப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், ‘பராசக்தி’ என்றால் பலருக்கு சிவாஜி ஞாபகம் வரும், சிலருக்கு ‘சிவாஜி’ படத்தின் ரஜினி டயலாக் ஞாபகம் வரும். உங்களுக்கு ‘பராசக்தி’ என்றதும் ஞாபகம் வருவது யார்? கமெண்டில் சொல்லுங்கள்.

News January 31, 2025

ரகசிய திருமணம் செய்தாரா ரொனால்டோ?

image

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன் காதலி ஜியார்ஜினா ரோட்ரிக்ஸை ரகசிய திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வரும் நிலையில், அண்மையில் ரோட்ரிக்ஸ் பிறந்தநாளுக்கு, ‘என் மனைவி’ என்று குறிப்பிட்டு இன்ஸ்டாவில் வாழ்த்தியுள்ளார். இதனால், ரகசியமாக திருமணம் நடந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

News January 31, 2025

‘Squid Game’ 3ஆவது சீசன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

image

‘Squid Game’ தொடரின் 3ஆவது சீசன் ஜூன் 27ல் வெளியாகும் என Netflix அறிவித்துள்ளது. முதல் பாகத்தை விட 2ஆவது பாகம் சுமார் என கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரிய வெப் தொடரான ‘Squid Game’ முதல் பாகம் உலகம் முழுவது பெரு வெற்றி பெற்றது. பண பிரச்னையால் தவிக்கும் நபர்கள், ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் வென்றால் கோடி கோடியாக பணம் கிடைக்கும் என்பதே இந்த வெப் சீரிஸின் அடிப்படை கதை.

News January 31, 2025

விருதுநகர் தொகுதியை குறிவைக்கும் EX மினிஸ்டர்

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சியினர் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக விருதுநகரிலேயே தங்கி, தனது மா.ஃபா அறக்கட்டளை மூலம் பல்வேறு மக்கள் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால், அவர் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதி என சொல்லப்படுகிறது.

News January 31, 2025

ராசி பலன்கள் (31-01-2025)

image

➤மேஷம் – மேன்மை ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – சினம் ➤கடகம் – வரவு ➤சிம்மம் – இரக்கம் ➤கன்னி – நட்பு ➤துலாம் – பகை ➤விருச்சிகம் – லாபம் ➤தனுசு – தொல்லை ➤மகரம் – அசதி ➤கும்பம் – கீர்த்தி ➤மீனம் – பெருமை.

error: Content is protected !!