news

News January 3, 2025

ஹுண்டாய் க்ரெட்டா EV அறிமுகமாகிறது

image

SUV வகை கார்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையாவது ஹுண்டாய் க்ரெட்டா வகை கார்களாகும். அதன் மின் வாகன (EV) வெர்சனை அந்நிறுவனம் வரும் 17ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 473 கிமீ பயணிக்கலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. அத்துடன், பல வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தக் கார் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

News January 3, 2025

போராட்டத்தை தடுக்கக் கூடாது: செல்வப்பெருந்தகை

image

ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும், அகிம்சை முறையில் போராடினால் காவல்துறை அனுமதிக்க வேண்டும் எனவும், அதில் அரசியல் பார்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்க சிலர் முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News January 3, 2025

உதயநிதியிடம் கதை சொல்வது கஷ்டம்: கிருத்திகா

image

உதயநிதியிடம் கதை சொல்லி Convince பண்ணுவது கஷ்டமான காரியம் என அவரது மனைவியும், இயக்குநருமான கிருத்திகா தெரிவித்துள்ளார். வெளிப்படையாகவும், நேர்மையாகவும் உதய் விமர்சனம் செய்வார் எனவும், தனது உலகம் அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொறுப்புகள் காரணமாக குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது இருவருக்கும் மிகவும் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 3, 2025

6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு தொடங்கிய சோதனை

image

வேலூரில் திமுக எம்பி<<15053599>> கதிர் ஆனந்த்<<>> வீட்டில் ED அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியுள்ளனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள வீட்டிற்குக் காலையில் அதிகாரிகள் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லாததால் வெளியில் காத்திருந்தனர். பின்னர், வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்திடம் பேசிய அதிகாரிகளிடம், உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடத்த அறிவுறுத்தியதைத் தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு சோதனை தொடங்கியுள்ளது.

News January 3, 2025

நாட்டில் மின் நுகர்வு 13,040 காேடி யூனிட்டுகளாக அதிகரிப்பு

image

நாட்டில் மின் நுகர்வு டிசம்பரில் 13,040 கோடி யூனிட்டுகளாக அதிகரித்து புதிய உச்சம் தாெட்டுள்ளது. பொதுவாக வெயில் காலத்தில் ஏசி, ஃபேன் அதிகம் பயன்படுத்தப்படுவதால் மின் நுகர்வு அதிகரிப்பது உண்டு. ஆனால் டிசம்பரில் பெரும்பாலான மாநிலங்களில் பருவமழையே பெய்தது. எனினும், மின் நுகர்வு 6% வரை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உங்கள் வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளீர்கள்?

News January 3, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பந்தக்கால்

image

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் ஜனவரி 16இல் நடைபெறும் இந்த போட்டிக்கான பணிகளுக்குப் பந்தக்கால் நடப்பட்டது. ஜன.14இல் அவனியாபுரம், ஜன.15இல் பாலமேடு, ஜன.16இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்’ மைதானத்தில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

News January 3, 2025

பொங்கல் தொகுப்பு டாேக்கன்: 4 நாள்களுக்குள் வழங்க உத்தரவு

image

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. சில இடங்களில் வீடு- வீடாகவும், சில இடங்களில் ரேஷன் கடைகளிலும் மக்கள் பெற்றுச் செல்கின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை 9ஆம் தேதி முதல் வழங்க திட்டமிட்டுள்ள உணவுத் துறை, டோக்கன் விநியோகத்தை 4 நாள்களுக்குள் வழங்கி முடிக்கும்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நீங்கள் டோக்கன் பெற்று விட்டீர்களா? கீழே பதிவிடுங்க.

News January 3, 2025

இறுக்கமாக ஜீன்ஸ் அணிகிறீர்களா? அலர்ட்

image

இறுக்கமான ஜீன்ஸ் அணியும் போது, வியர்வை வெளியாவதில் சிக்கல்கள் உண்டாகும். அதன் காரணமாக, சருமத்தில் எரிச்சல், சிரங்கு, அரிப்பு போன்றவை உண்டாகும். இடுப்பில் ஜீன்ஸ் இறுக்கமாக இருப்பதால், செரிமான அமைப்பில் அழுத்தம் அதிகரித்து அஜீரண கோளாறுகள் உண்டாகும். மேலும், இது போன்ற ஜீன்ஸ் நரம்புகளை அதிக நேரம் அழுத்தி பிடிப்பதால், குழந்தையின்மை பிரச்னையும் உண்டாகலாம். இவற்றை, லூசான காட்டன் ஜீன்ஸை அணியலாம்.

News January 3, 2025

தலைகீழாக மாறிய லக்னோ 5 கொலை விவகாரம்

image

லக்னோவில் கடந்த <<15037822>>31ஆம் தேதி<<>> தாய், 4 தங்கைகளை இளைஞர் அர்ஷத் கொலை செய்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அர்ஷத் வீடியோவில் கூறியதை மறுத்துள்ள போலீசார், அவர் குற்றம்சாட்டிய ஆலிமிடம் கடந்தாண்டே ₹7 லட்சத்திற்கு அவரது நிலத்தை விற்று பணம் பெற்றதாகவும் கூறியுள்ளனர். தந்தையுடன் சேர்ந்து குடும்பத்தைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அர்ஷத் நாடகமாடுவதாகவும் போலீசார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 3, 2025

சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு

image

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹80 முதல் ₹100 என விற்பனையானது. அண்மையில் பெய்த கனமழையால் சின்ன வெங்காய பயிர்கள் அழுகியதாகத் தெரிகிறது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இதன் விலை குறைய 10 நாள்கள் ஆகலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!