news

News February 1, 2025

பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

image

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துவரும் வேளையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட்டை புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததாகத் தெரிகிறது.

News February 1, 2025

BREAKING: அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்

image

2025-2026ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்து வருகிறார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் மக்களவையில் அமளி நிலவியது. எனினும், அமளியை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்கிறார்.

News February 1, 2025

நடிகை ஸ்வரா பாஸ்கர் X பக்கம் முடக்கம்

image

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் X பக்கம், பதிப்புரிமை மீறப்பட்டதாக முடக்கப்பட்டுள்ளது. ஜன.26இல் சில ஸ்கிரீன் ஷாட்டுகளை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது அபத்தமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தலைப்பிட்டிருந்தார். ‘காந்திஜி… நாங்கள் வெட்கப்படுகிறோம்; உங்கள் கொலையாளிகள் இன்னும் உயிருடன் உள்ளனர்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி அவர் X பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

News February 1, 2025

இன்னும் சில நிமிடங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல்

image

2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்னும் சில மணி நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவையில் சரியாக காலை 11 மணிக்கு அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். அதில் வருமான வரி உச்சவரம்பு விலக்கு, நடுத்தர வகுப்பினருக்கான சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்திகளை அறிய WAY2NEWS APP உடன் இணைந்திருங்கள்.

News February 1, 2025

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

image

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார். இதனை முன்னிட்டு, இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி விவாதம் நடத்திய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

News February 1, 2025

கும்பமேளா பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு

image

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தகவல்களின்படி, அந்த எண்ணிக்கை மேலும் 18 அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News February 1, 2025

‘இதெல்லாம் நியாயமே கிடையாது..’

image

2வது இன்னிங்சில் துபேவிற்கு பதிலாக விளையாடிய, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இங்கி. கேப்டன் பட்லர், ராணா கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது. துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் வந்துள்ளார் என்பதை ஏற்க மறுத்தேன். நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

மத்திய பட்ஜெட்: உடனுக்குடன் WAY2NEWS APPஇல்

image

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். இதுகுறித்த செய்திகள் மிகத் துல்லியமாகவும், மிக விரைவாகவும் WAY2NEWS APPஇல் உடனுக்குடன் வெளியிடப்படும். ஆதலால் மத்திய பட்ஜெட்டில் இருக்கும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து WAY2NEWS APP உடன் இணைந்திருங்கள். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News February 1, 2025

நிதிநிலை அறிக்கையுடன் பார்லிமென்ட் வந்த FM நிர்மலா

image

ஜனாதிபதியை திரெளபதி முர்முவை சந்தித்த பிறகு நிதிநிலை அறிக்கை ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட் வந்தடைந்தார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, நிதித்துறை செயலாளர் பாண்டே ஆகியோரும் உள்ளனர். PM மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

News February 1, 2025

BREAKING: ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.62 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.7,730க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.61,840க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை முதல்முறையாக நெருங்கியுள்ளது.

error: Content is protected !!