news

News February 2, 2025

World Cup மூலம் World-ஐ திரும்பி பார்க்கவைத்த த்ரிஷா

image

உலகக்கோப்பையை கைப்பற்றி IND இளம்பெண்கள் படையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கொங்காடி த்ரிஷா நாயகியாக உருவெடுத்து இருக்கிறார் . இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு சதத்துடன் 309 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமல்ல, 4 இன்னிங்ஸில் பந்துவீசிய அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக இன்றைய இறுதிப்போட்டியில், 8 பவுண்டரிகளுடன் 44* ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

News February 2, 2025

அரசு உத்தரவுக்கு மதிப்பில்லை

image

முகூர்த்த தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு நேற்று அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படவில்லை. விடுமுறை நாள்களில் கூட தங்களை பணிக்கு வர சொல்வது சரியல்ல என்று சார் பதிவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், மக்கள்தான் பாதிப்பு அடைந்துள்ளனர்.

News February 2, 2025

உலகக்கோப்பையில் ஸ்டாராக ஜொலித்த தமிழச்சி

image

2வது முறையாக WC-ஐ கைப்பற்றி இந்திய இளம்பெண்கள் படை சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் 4 வீராங்கனைகள் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். தமிழகத்தை சேர்ந்த கமலினி, 7 போட்டிகளில் அரைசதம் உட்பட 143 ரன்கள் குவித்தார். வைஷ்ணவி 6 போட்டிகளில் 17 விக்கெட், சிறந்த பந்துவீச்சு 5/5. ஆயுஷி சுக்லா 7 போட்டிகளில் 14 விக்கெட், சிறந்து பந்துவீச்சு 4/8. பருணிகா சிசோடியா 6 போட்டிகளில் 10 விக்கெட், சிறந்த பந்துவீச்சு 3/7.

News February 2, 2025

சூடான் சந்தை பகுதியில் தாக்குதல்: 58 பேர் பலி

image

சூடானில் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். அதிரடி படையை இணைக்கும் விவகாரத்தால் ராணுவம், துணை ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள சந்தையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 58 பேர் பலியானதுடன் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை துணை ராணுவத்தினரே நடத்தியதாக கூறப்படுகிறது.

News February 2, 2025

கிரிக்கெட்: அசத்தும் த்ரிஷா

image

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 82 ரன்களில் சுருண்டது. இதற்கு இந்திய அணியின் அபார பந்துவீச்சே காரணம். ஸ்காட்லாந்துக்கு எதிராக சதமடித்த த்ரிஷா, இறுதிப் போட்டியிலும் அசத்தினார். 3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு 44 ரன்களை விளாசினார்.

News February 2, 2025

ஜல்லிக்கட்டு: தொண்டையில் கொம்பு குத்தி இளைஞர் பலி

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாட்டின் கொம்பு தொண்டையில் குத்தி இளைஞர் பலியானார். குமாரபாளையத்தில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் பல பகுதிகளில் இருந்தும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சேலம் தலைவாசலைச் சேர்ந்த எடிசன், காளையை அடக்க முயன்றபோது தொண்டையில் கொம்பு குத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 2, 2025

அரசியலுக்கு வரும் தோனி..? காங்கிரஸ் MP சொன்ன தகவல்

image

அரசியலுக்கு தேவையான மக்கள் ஈர்ப்பு தோனியிடம் இருக்கும் நிலையில், அவர் நல்ல அரசியல் தலைவராக இருக்க முடியும் என காங்கிரஸ் MP ராஜீவ் சுக்லா தெரிவித்தார். தோனி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அப்படி நடந்தால், அவர் பிரபலமாக இருப்பதால் வெற்றி பெறுவார் என்றார். மேலும், MPயாக போட்டியிடுகிறீர்களா? என கேட்டபோது, அதில் உண்மையில்லை என தோனி தெரிவித்ததாகவும் கூறினார்.

News February 2, 2025

பயங்கர மோதலில் 23 பேர் சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ராணுவ வீரர்களும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்தாண்டில் நிகழ்ந்த 444 தாக்குதல்களில், 685 வீரர்கள் பலியாகினர். பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் ஒருபுறம் பெரும் சவாலாக உள்ளது.

News February 2, 2025

தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா

image

இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை U19 மகளிர் T20 இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 82 ரன்னில் ஆல் அவுட்டாகியுள்ளது. அதிகபட்சமாக Mieke van Voorst 23 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் கோங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளும், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 83 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்தியா கோப்பையை கைப்பற்றுமா?

News February 2, 2025

₹450 கோடிக்கு ஏலம் போன அதிசய கார்

image

ஜெர்மனியில் பார்முலா ஒன் ரேஸ் மெர்சிடிஸ் கார் 52 மில்லியன் US டாலருக்கு (₹450 கோடி) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பார்முலா ஒன் கார் பந்தய ஜாம்பவான்களாக இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டிர்லிங் மோஸ், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஜுவான் மேனுவல் பேன்ஜியோ பயன்படுத்திய இந்த கார், 1965 முதல் ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் மியூசியத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வளவு பணம் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

error: Content is protected !!