India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,208 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மொத்தமுள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. நிப்டியும் 298 புள்ளிகள் உயர்ந்து 23,659 ஆக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வு, வட்டிவிகிதத்தை RBI குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச மார்க்கெட்டில் பாசிடிவ் மாற்றங்கள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
சென்னையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். மேலும் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என பதில் அளித்துவிட்டு சென்றார்.
<<15354859>>Guillain-Barre Syndrome நோய்<<>> பாதிப்பு காரணமாக தமிழகத்திலும் ஒரு உயிர் பிரிந்துள்ளது. Autoimmunity நிலையான இது உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் *நடப்பதில், கண்கள் அல்லது முகத்தை அசைப்பதில் சிரமம் ஏற்படலாம் *சிறுநீரை கட்டுப்படுத்துவதில் சிரமம் *வேகமான இதய துடிப்பு *குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்தம் *சுவாசம் அல்லது விழுங்குவதில் சிரமம் *பார்வை மங்கலாகும். SHARE IT.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலு பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் நாளிதழுக்கு ₹25 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ₹1 கோடி இழப்பீடு கேட்டு 2014இல் ஜூனியர் விகடனுக்கு எதிராக டி.ஆர்.பாலு தொடர்ந்த இந்த வழக்கில் நீதிபதி நக்கீரன் தீர்ப்பளித்துள்ளார்.
ஒரு மனிதன் தன்னுடைய உடலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை. ஒரு ஆரோக்கியமான உடலில் BP: 120/80 இருக்கணும். இதய துடிப்பு: 70-100, உடலின் வெப்பநிலை: 36.4 ° C-37.2 ° C, ஹீமோகுளோபின்: ஆண்கள் 13-18, பெண்கள் 11.50-16 கிராம்/deciliter, கொழுப்பு130-200, , வைட்டமின் டி3: 20-50ng/ml, வைட்டமின் பி12: 200-900pg/ml. ஆக்சிஜன் ரேட்: சராசரியாக 95% – 100% இருக்க வேண்டும். SHARE IT.
தன் உடல்நிலை குறித்து தவறாக செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா டெல்லி HCல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக, கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 17ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல்களை முடக்கவும் HC உத்தரவிட்டிருந்தது.
கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார மைய மருத்துவர், ₹200 பெற்றுக்கொண்டு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியை குழந்தைக்கு போட்டதால் இந்த துயரம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில், பெற்றோர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெட்டிசன்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. காவிரியின் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மாநிலங்களவையில் கல்யாணசுந்தரம் MP எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என கூறியுள்ளது. ஆனால் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.
தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோதமாக அரசு நடந்துக்கொள்வதாக சாடிய அவர், கைது செய்தவர்களை உடனே விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் நடத்த இருந்த போராட்டத்தை தடுக்க, மதுரை முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில், BJP தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழலியல் மன்றங்கள் உருவாக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்ற 3ஆவது உச்சி மாநாட்டில் பேசிய அவர், காலநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். மேலும் வயநாடு, திருவண்ணாமலை நிலச்சரிவுகளை சுட்டிக்காட்டிய அவர், காலநிலை மாற்ற சூழலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.