India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DMK தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றிய பிரதிநிதியுமான சேலம் எழில்அரசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலிருந்து யாரையாவது நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். ENG எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டதாகவும், அதனால் CT தொடரில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு வருண் முக்கிய பங்காற்றுவார் எனவும் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, நாளை பிரதமர் மோடி புனித நீராடுகிறார். இதையொட்டி, மகா கும்பமேளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புனித நீராடியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிப்.16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. 8 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
வைகோவின் உதவியாளர் பிரசாத்தை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமான LTTE அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
HDFC வங்கியில் 500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. RELATIONSHIP மேனேஜர் பதவிகளுக்கு 1-10 வருட அனுபவமுள்ள பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வருடத்திற்கு ₹3 லட்சம் – ₹12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பிப். 7-க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் அறிய <
சட்டவிரோத மதமாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கும் வகையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, மைனர், பெண், SC, ST தொடர்பான விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹25,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன், வேறு மதத்திற்கு மாற விரும்பினால், 60 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தென்னிந்திய ரசிகர்களை தொடர்ந்து தனது நடிப்பாலும், வசிகரிக்கும் அழகாலும் சமந்தா ஈர்த்து வருகிறார். மயோசிடிஸ் நோய்யில் இருந்து மீண்டு வந்துள்ளவர் தனது லுக்கை ஹாலிவுட் ஸ்டார்களை போல, செம ஸ்டைலாக மாற்றியுள்ளார். ஆங்கிலேய மேகசினில் வந்துள்ள இந்த போட்டோவில் கலரிங் செய்த அவரின் ஹேர்ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் ‘வாவ்..வாட் ஏ பியூட்டி’ என வர்ணித்து வருகிறார்கள். உங்களுக்கு எந்த போட்டோ பிடிச்சிருக்கு?
தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகக் காரைக்குடியிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,208 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மொத்தமுள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. நிப்டியும் 298 புள்ளிகள் உயர்ந்து 23,659 ஆக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வு, வட்டிவிகிதத்தை RBI குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச மார்க்கெட்டில் பாசிடிவ் மாற்றங்கள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
Sorry, no posts matched your criteria.