India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய பிரதேசத்தில் தனது மனைவி எப்போதும் அதிகமாக பேசிக்கொண்டு இருந்ததால், கணவன் டைவர்ஸ் கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் ஒருவார்த்தை கூட பேசாமல், குழந்தையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதுமானது என கணவரின் வீட்டார் எதிர்பார்க்கின்றனர். 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதிக்கு, 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த கேஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள், கமெண்ட் பண்ணுங்க.
சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பலர் ஆபாசமாக வீடியோ போடுவது குறித்து நடிகை ரக்ஷிதா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லைக் குறைந்தாலே போதும். இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக வீடியோ போடுவது கம்மியாகும். அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு ஆபாச வீடியோ போடுகின்றனர். அவர்கள் போடும் ஆபாச வீடியோக்களால் சாலையில் செல்லும் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டியில் செப்டிக் டேங்கில் விழுந்து எல்கேஜி குழந்தை லியா பலியான சம்பவத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. செப்டிக் டேங்கை சுற்றியுள்ள இரும்புக் கம்பி வேலியை வளைத்து, குழந்தையால் அதில் போக முடியுமா? கல்வி நிர்வாகம் கூறியபடியே, குழந்தை கழிவறை செல்வதாக இருந்தாலும், செப்டிக் டேங்க் செல்ல காரணம் என்ன? செப்டிக் டேங்கில் குழந்தை விழுந்திருந்தால், உடை மட்டும் நனையாமல் இருந்தது எப்படி?
9-12 வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 வழங்குகிறது. இதற்காக தேசிய வருவாய் தேர்வு எனும் தேர்வை 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்குகிறது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வருகிற 27ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அஜித்குமார் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் இன்று. குடும்பத்துடன் மகளின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஷாலினி. கேக் முன்பு அனோஷ்கா அமர்ந்திருக்க, தம்பி ஆத்விக், அஜித், ஷாலினி அருகில் உள்ளனர். மகளின் 17-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடியுள்ளார் அஜித். என்னதான் ப்ரோபஷனலாக இருந்தாலும், பேமிலிக்கு டைம் கொடுப்பதில் அஜித் எப்போதும் முன்மாதிரி. குட் டாடி!
மொபைலில் கேம் விளையாடினால் வெளியுலகமே மறந்துவிடுகிறது. பீகாரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து PUBG கேம் விளையாடிய 3 டீன் ஏஜ் சிறுவர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். ரயில் வருவதை கவனிக்காமல் விளையாட்டில் மும்முரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எங்கு இருக்கிறோம் என்பதையே மறக்கச் செய்துவிடுகிறது இந்த மொபைல். பசங்க கிட்ட போன் கொடுக்கும்போது, பெற்றோர்கள் கவனமா இருக்க வேண்டியது அவசியம்.
அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து ரகசிய பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மூத்தத் தலைவரை மேற்கோள்காட்டி, கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது குறித்து 2 கட்சிகளும் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பாஜகவில் அமைப்பு ரீதியிலான தேர்தல் முடிந்ததும் முழுவீச்சில் பேச்சு நடத்தப்படும், அரசியலில் எதுவும் நடக்கும் என அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
சிவகங்கையில் ஜன.,21 மற்றும் 22இல் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அழகப்பா பல்கலை. நூலகத்தை ஜனவரி.21இல் திறந்து வைக்கும் அவர், 22ஆம் தேதி நடக்கும் அரசு விழாவில் 40,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து, தற்போது சிவகங்கையில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
வேலு நாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டதை ஒட்டி, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வீரமங்கை வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு பனையூர் தவெக அலுவலகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செய்ததாக விஜய் கூறியுள்ளார். மேலும், பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்க உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு என்றதும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது கேலண்டர்தான். வீட்டில் இருக்கும் பழைய கேலண்டரை மாற்றி, புதிதாக வாங்குவதை பெரும்பாலானோர் வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோல சிவகாசியில் மட்டும் தினசரி மற்றும் மாத கேலண்டர்கள், சுமார் ரூ.400 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் புதிய கேலண்டர் வாங்கி விட்டீர்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.