India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மேற்கு மாவட்ட தவெக செயலாளராக நியமிக்கப்பட்ட சபினுக்கு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கும், போலீசை அடித்தவருக்கும் பதவியா என கேட்டு தவெகவினர் புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன், சபின் மீதான FIR நகல்களையும் இணைத்துள்ளனர். மேலும், குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு பதவியில்லை என்ற அறிவிப்பு என்னவானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இதன் மூலம், 4ம் வரிசையில் உலக அளவில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார். உலக அளவில் ODIயில் 4ம் வரிசையில் 1000 ரன்களை கடந்து 50க்கும் அதிகமான பேட்டிங் ஆவரேஜ் மற்றும் 100க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில், கட்சியில் எந்தப் பிளவும் இல்லை என்று EPS கூறியிருந்தார். கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் OPS பக்கம் இருப்பதாக ரவீந்திரநாத் கூறியிருந்தார். இந்நிலையில் தீர்ப்பு யாருக்கு சாதகமாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக மா.செ ஆலோசனைக் கூட்டம் பிரேமலதா தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும், 13 மாவட்டங்களில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், வேங்கைவயல் வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை தேவை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேக்கிங்கில் இருக்கும் Foldable ஐபோன் மீது நிறைய expectations உள்ளது. இதில், ஒவ்வொரு ஸ்கீரினும் 6.1 இன்ச் என மொத்தம் 12 இன்ச் டச் ஸ்கீரின் வழங்கப்படலாம். அதே நேரத்தில், மடக்கி வைக்கும் போது போன் 9.2 mm தடிமனில் இருக்கும் எனப்படுகிறது. மேலும், 5000mAh பேட்டரியும் வழங்கப்படலாம் என பேசப்படுகின்றன. வரும் 2026 பிற்பகுதியில், இந்த Foldable ஐபோன் சந்தைக்கு வரக்கூடும். ஆனா விலை தான் என்னனு தெரியல?
டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் சில பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் காமராஜர் ஆட்சியை மலர வைக்கும் நோக்கில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் NR காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கட்சியின் 15ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சென்னையில் நடிகர் ரிஷிகாந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை பாரில் மது அருந்தியபோது, நடனமாடிய ஒருவரை ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாகவும், அப்போது அவரை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காயங்களுடன் ரிஷிகாந்த் ஹாஸ்பிட்டலில் உள்ள நிலையில், ஹரிஷ்(27) என்பவரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். சீமராஜா, செவப்பி உள்ளிட்ட பல படங்களில் ரிஷிகாந்த் நடித்துள்ளார்.
விராட் கோலி காயத்தால் நேற்றைய ODI போட்டியில் விளையாடவில்லை. அடுத்த போட்டியிலாவது கோலி விளையாடுவாரா? காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் கோலி விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து பதிலளித்த அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், ‘கோலிக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அவர் நிச்சயமாக 2வது போட்டியில் விளையாடுவார் என நினைக்கிறேன்’ எனக் கூறினார்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி பள்ளியில் 3 ஆசிரியர்கள் சேர்ந்து மாணவியை வன்கொடுமை செய்துள்ளது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.