India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் LIC நிறுவனம் நிகர லாபமாக ரூ.11,506 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 17% அதிகமாகும். பிரீமியம் வருவாய் ரூ.1,06,891 கோடியாகும். அதேநேரம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த காலாண்டில் மொத்த வருவாய் ரூ.10,453 கோடி குறைந்து, ரூ.2,01,994 கோடியாக உள்ளது. இதன் காரணமாக இன்று LIC பங்குகள் 2.11% சரிந்து ரூ.811-ல் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்டம் வடலூரில் தண்ணீர் என்று நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் (29) மகள் மைதிலிக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவர்களது வீட்டில் அடுப்பெரிப்பதற்காக பாட்டிலில் டீசல் வைத்திருந்தனர். அதனை தண்ணீர் என்று நினைத்து மைதிலி குடித்ததாகத் தெரிகிறது. உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மோனாலிசா! மகா கும்பமேளாவில் மாலைகள் விற்றுக்கொண்டிருந்த இந்த பெண், தன் காந்தக் கண்களால் ஒரே நாளில் பான் இந்தியா பிரபலமாக மாறினார். இவர் தற்போது டயரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதில் நடிக்க அவருக்கு ரூ.15 லட்சம் சம்பளமும், உள்ளூர் புரமோஷன்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சமும் கிடைக்குமாம். வெள்ளித்திரையிலும், இவரின் கண்கள் வலை வீசுமா?
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக 916 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 24,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். வேறு எந்த வழக்கிலும் இவ்வளவு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அன்புக்கு உரியவரை காதலுடன் அணைத்தால் *இணையருடன் நெருக்கம் கூடும், பிணைப்பு வலுவாகும் *செரடோனின் ஹார்மோன் சுரப்பால் உற்சாகம் பிறக்கும் *உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் *அப்போது சுரக்கும் எண்டார்பின் ஹார்மோன் உடல்வலியை குறைத்து, ரிலாக்ஸ் செய்யும் *மனஅழுத்தம் தணியும். *மனச்சோர்வு நீங்கும் *இதயத்தை இதமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *கவலை, பதற்றம், மரணம் பற்றிய அச்சம் குறையும்.
11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனையடுத்து, அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில், மும்முனை மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. பராமரிப்புக்காக கூட மின் தடை கூடாது என்றும், இரவு நேரங்களிலும் மாணாக்கர்கள் படிக்க தடையற்ற மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு சாப்பிடுவதற்கு முன்னர் சிறிய நடைபயிற்சியில் ஈடுபடுவதால் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அவை :
* செரிமானம் அதிகரிக்கும்.
* வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி உயரும்.
* நள்ளிரவு பசி இருக்காது.
* ஆழ்ந்த தூக்கம் வரும்.
* ரத்தத்தில் சர்க்கரை குறையும்.
* மனஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ₹528.80 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கிமிற்கு ₹1,708 கோடி, திரிபுரா ₹1,338 கோடி, பீகார் ₹1,570 கோடி, மகாராஷ்டிரா ₹1,392 கோடி, உத்தரப் பிரதேசம் ₹1,174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான சிக்கிமுக்கு, தமிழகத்தை விட 3 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடிகையும், VJவுமான மகேஷ்வரி உபி கும்பமேளாவில் புனித நீராடிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தீவிர சிவ பக்தையான அவரது படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். நடப்பு கும்பமேளாவில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் முக்கிய நடிகர் நடிகைகளும் புனித நீராடி, சிவனை தரிசனம் செய்துள்ளனர்.
திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை அவர் அந்த பணியில் தொடருவார். புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாக உள்ளார்.
Sorry, no posts matched your criteria.