news

News February 8, 2025

புதிய IT சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

image

60 ஆண்டுகள் பழைய வருமான வரிச் சட்டத்துக்கு பதிலாக, புதிய IT சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இம்மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

காது கொடுத்துக் கேளுங்கள்

image

குழந்தைகளை புரிந்துகொள்ள நாம் முயலுவதே இல்லை. மாறாக, குழந்தைகள் தான், நம்மை புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறோம். இதன் காரணமாகவே குழந்தைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது நீங்கள் கேட்காவிட்டால், பின்னர் பெரிய விஷயங்களை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.

News February 8, 2025

டிரம்ப்பை பின்தள்ளிய மோடி

image

தங்கள் நாடுகளில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில், அதிக அப்ரூவல் ரேட்டிங் பெற்று PM மோடி முதல் இடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்டண்ட் நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் மோடி 75% ரேட்டிங் பெற்றுள்ளார். கிளாடியா ஷீன்பாம்- மெக்சிகோ(66%), ஜாவியர் மிலேய்- அர்ஜெண்டினா(65%), கரின் கெல்லர் -சுவிஸ் (56%), டொனால்ட் டிரம்ப்- அமெரிக்கா(52%), ஆண்டனி அல்பனீஸ்- ஆஸி.,(46%) பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News February 8, 2025

ராசி பலன்கள் (8.02.2025)

image

மேஷம் – போட்டி, ரிஷபம் – வெற்றி, மிதுனம் – நஷ்டம், கடகம் – ஆதரவு, சிம்மம் – புகழ், கன்னி – சாதனை, துலாம் – உற்சாகம், விருச்சிகம் – ஆதாயம், தனுசு – ஜெயம், மகரம் – சாந்தம், கும்பம் – கடன் தீர்வு, மீனம் – செலவு.

News February 7, 2025

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

image

487 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். வெளியேற்றப்படும் இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா். சில நாள்கள் முன்பு 104 இந்தியர்கள் கை, கால்கள் விலங்கிடப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

News February 7, 2025

நீங்க வேகமாக சாப்பிடும் பழக்கமுள்ளவரா?

image

வேகமாக சாப்பிடுவது உடல் நலனை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் முறையும் மிக முக்கியம் என கூறும் டாக்டர்கள், மெதுவாக சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கும். ஆனால் வேகமாக சாப்பிட்டால் வாயு பிரச்னை, உடல்பருமன் பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர். ஆதலால் உணவு சாப்பிடுகையில் ரிலாக்ஸாக சாப்பிடுங்க. SHARE IT.

News February 7, 2025

குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க உத்தரவு

image

மணப்பாறை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதானவரை சிறையில் அடைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தாளாளரின் கணவர் வசந்தகுமாரை பிப்ரவரி 21ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தாளாளர் சுதா, முதல்வர் ஜெயலட்சுமி உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்

image

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்ட FRESHER 400 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யப்பட்ட இவர்கள், மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 2022இல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சுமார் இரண்டரை ஆண்டுகாலம் வேலைக்காக காத்திருந்தது தெரியவந்துள்ளது.

News February 7, 2025

தேர்தல் முடிவுகளை Way2Newsஇல் காணுங்கள்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நாளை Way2News அப்ளிகேஷனில் உடனுக்குடன் காணுங்கள். காலை 8 மணி முதல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை Way2News எக்ஸ்க்ளூசிவாக கவரேஜ் செய்து அடுத்த நொடியே உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கவுள்ளது. இணைந்திருங்கள் Way2Newsஉடன்.

News February 7, 2025

மரண தண்டனை கோரிய மனு தள்ளுபடி

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி மே.வங்க அரசு தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால், அதனை சிபிஐ தாக்கல் செய்ய அனுமதியளித்தும் உத்தரவிட்டுள்ளது. பயற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!