news

News February 8, 2025

டெல்லியில் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த ‘பத்லி’

image

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் பத்லி(Badli) சட்டமன்றத் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஒரே தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் தேவேந்தர் யாதவ் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு ஆளும் கட்சியான ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்துள்ளது.

News February 8, 2025

ஆம் ஆத்மியை விட 13 தொகுதிகளில் BJP முன்னிலை

image

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் 37 இடங்களில் முன்னிலை பெற்றிருந்த பாஜக ஒரு இடம் முன்னேறி 38 இடங்களிலும், 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த ஆம் ஆத்மி 5 இடங்கள் முன்னேறி 25 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூடுதலாக 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

News February 8, 2025

இந்தியாதான் கவலைப்படணும்: பாக். கோச் சீண்டல்!

image

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவது சந்தேகமாகியிருக்கிறது. இது குறித்து பாக். கோச் பேசும் போது ‘பும்ராவின் உடல்நிலை குறித்து இந்திய அணி தான் கவலைப்படணும். எந்த அணிக்கும் பும்ரா போன்றவர் இருந்தால், அது பிளஸ் பாய்ண்ட் தான். ஆனால், அவரை வைத்து மட்டும் நாங்கள் வியூகங்கள் வகுக்கவில்லை என்றார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.

News February 8, 2025

பாஜக 37 இடங்களில் முன்னிலை

image

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும். தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 37 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம், 25 இடங்களில் முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி, தற்போது பின்னடைவை சந்தித்து 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

News February 8, 2025

பெரியார் மண்ணில் திமுக ஆதிக்கம்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று முடிவின்படி சந்திரகுமாா் 5,211 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 981 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்து வருகிறது.

News February 8, 2025

நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

image

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் ஏற்படுகிறது. பாஜகவும், ஆம் ஆத்மியும் 18 தொகுதிகளில் ஒரே மாதிரியாக முன்னிலை பெற்றிருந்தன. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக பாஜக 29 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களிலும், காங்., அதே ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

News February 8, 2025

BREAKING: அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை

image

டெல்லியில் பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. நியூ டெல்லி தொகுதியில் முதல் சுற்றில் பின்னடைவை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது முன்னிலை பெற்றுள்ளார். ஆனாலும், முதல்வர் அதிஷி, மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News February 8, 2025

பாஜக 18, ஆம் ஆத்மி 18.. கடும் போட்டி

image

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து வந்த ஆம் ஆத்மி தற்போது எழுச்சி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 10 இடங்களில் இருந்து ஒரே அடியாக 18 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், தேர்தல் நிலவரம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

News February 8, 2025

BREAKING: டெல்லி முதல்வர் அதிஷி பின்னடைவு

image

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து முதல்வர் அதிஷியும் பின்னடைவை சந்தித்துள்ளார். கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 8, 2025

தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் ஆம் ஆத்மி

image

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 14, ஆம் ஆத்மி 9 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முதற்கட்ட தலைவர்கள் பின்னடைவை சந்தித்த நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

error: Content is protected !!