India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உங்களது பிள்ளைகளை ஒரு முறையாவது அரசு மருத்துவமனை வார்டுகளுக்கு கூட்டிக் கொண்டுபோய் காட்டுங்கள் என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். அப்போதுதான், மக்கள் உடல் நலக்குறைவால் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், நமது உடல் எவ்வளவு முக்கியம் என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தைப்பூசம் தினமான பிப்ரவரி 11ஆம் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் EPS சட்டம் இயற்றினார். அதன்படி, இந்தாண்டு வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை விடுப்பு எடுத்து வார இறுதியுடன் தொடர் விடுமுறையை கொண்டாட சம்பளதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சிகள் மூலம் அதை ஆரோக்கியமாக வைக்கலாம். ஆனால், பின்வரும் பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தி அதன் வேலைகளை பாதிக்கும். அவை: *நாட்பட்ட மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது *புகைப்பழக்கம் *அதிகம் இனிப்பு உட்கொள்வது *அதிக மதுப்பழக்கம் *உடலுழைப்பு இல்லாத லைஃப்ஸ்டைல். இவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக வேலை செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார். ஜன.30 வரை நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேர் வியாபாரிகளுக்கான கடன் பெற்றுள்ளனர். பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெசிகா ஆல்பா, தனது 17 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கும் கணவர் கேஷ் வாரனுக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். விவாகாரத்துக்கான காரணம் குறித்து இருவரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கவில்லை.
திமுக ஆட்சி இருக்கும் வரை பாஜக தலைவராக அண்ணாமலையும், ஆளுநராக ஆர்.என்.ரவியும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆவடி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாம் பரப்புரை செய்யாமல், இவர்கள் இருவரும் பேசியே திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள் என்றார். கவுண்டமணி காமெடி போல் ஆளுநர் பேசுவது, கேட்கும் போதும் புரியவில்லை, வீட்டு போய் கேட்டாலும் புரியவில்லை என்றும் கிண்டல் செய்தார்.
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பையனூர் பகுதியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் முடிவுக்கு வந்தது. அதன்படி, ஆம் ஆத்மி 22 தொகுதிகளை வென்றுள்ளது. இதனால், விரைவில் பாஜக முதல்வர் பொறுப்பேற்கவிருக்கிறார். இக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் நாளை கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார் குறித்து சீமான் கட்டிய பொய் கோட்டை இடைத்தேர்தல் மூலம் இடிந்து போனதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். சீமானின் அரசியல் பொய்களை நம்பி அவரிடம் சென்ற அனைவரும் விரைவில் விலகுவார்கள் என்றும், தமிழக அரசியலில் இருந்து சீமான் ஓரங்கட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை பொய்களை கூறினாலும், பெரியாரை அற்பர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செல்லப் பிராணிகளின் மறைவு மிகவும் துயரம் தரக்கூடியது. ஆம், தன் உயிருக்கு உயிரான செல்லப் பூனை பில்லோ மறைவுக்கு, கண்ணீருடன் இன்ஸ்டாவில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகை மிருணாள் தாக்கூர். ‘எங்கள் குடும்பத்தின் இதயத்துடிப்பாக இருந்தாய். உனது கொஞ்சல்களும், முத்தங்களும் என் நாள்களை மகிழ்வாக்கியது. உனது இருப்பு எங்கள் ஆன்மாக்களுக்கு இதமளித்தது’ என உருக்கமாக பதிவிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.