news

News January 4, 2025

செப்டிக் டேங்கில் சடலமாக கிடந்த பத்திரிகையாளர்

image

சத்தீஸ்கரில் சாலை ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். முகேஷ் சந்திரகர்(28) தனியார் சேனலில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 1ஆம் தேதி காணாமல் போனார். இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு பிஜப்பூரில் காண்ட்ராக்டர் ஒருவரின் வணிக வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், 2021இல் காவல்துறை விருது பெற்றவர் ஆவார்.

News January 4, 2025

திரும்பி வந்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

image

காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற கேப்டன் பும்ரா மைதானத்திற்கு திரும்பியுள்ளார். இது, இந்திய அணிக்கு சாதமானதாக பார்க்கப்படுகிறது. எதற்காக வெளியே சென்றார்? என்ன காயம் ஏற்பட்டது போன்ற தகவல்களை பிசிசிஐ வெளியிடவில்லை. இருப்பினும், மொத்த தொடரையும் பும்ராவே தாங்கிச் செல்வதால் அவர் இல்லாமல் ஜெயிப்பது கடினம் என்ற நிலை இருந்தது. தற்போது அவர் திரும்பியிருப்பதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

News January 4, 2025

SHOCKING: மணிப்பூரில் என்ன நடக்கிறது?

image

மணிப்பூரில் நேற்று கங்போக்பி மாவட்ட போலீஸ் நிலையத்தின் மீது குக்கிகள் நடத்திய <<15059253>>தாக்குதலில்<<>> எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்பட போலீஸார் காயமடைந்தனர். இந்நிலையில், நகரத் தெருக்களில் நவீன ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அச்சமின்றி நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து ‘#IndiaUnderAttack’ என்ற ஹேஷ்டேக்கில், இது இந்தியா தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?

News January 4, 2025

இவ்வளவு கொடுரமானவனா ஞானசேகரன்?

image

அண்ணா பல்கலை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சிக்கிய ஞானசேகரன் குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மாணவி மட்டுமல்லாமல் காதலிக்கும் பல பெண்களை குறிவைத்து மிரட்டி வன்கொடுமை செய்துள்ளான் ஞானசேகரன். அதோடு, பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றான். அவனை கைது செய்ய போலீஸ் தேடிவந்த நிலையில்தான் அண்ணா யுனிவ் விவகாரத்தில் கைதாகியிருக்கிறான்.

News January 4, 2025

அணு விஞ்ஞானி இரா. சிதம்பரம் காலமானார்

image

இந்தியாவின் முன்னணி அணு அறிவியலாளர் இரா.சிதம்பரம் என்கிற ராஜகோபாலன் சிதம்பரம் (88) மும்பையில் காலமானார். சென்னையில் பிறந்த இவர், பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றினார். மத்திய அரசின் அறிவியல் அறிவுரைஞராக பணியாற்றி வந்த அவர், பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராகாவும் இருந்துள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியுள்ளது.

News January 4, 2025

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்

image

அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் 5 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தனி நபருக்கான வருமான வரி குறைப்பு
* பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
* இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்துதல்
* அனைத்து மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்தல்
* சீனாவால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியை சரி செய்தல்

News January 4, 2025

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

image

சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியில் செயல்படும் சாய்நாத் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் பணிபுரியும் இந்த பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் சிக்கியதாகவும், இதில் 4 பேரது சடலங்களை மீட்புப் படையினர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 4, 2025

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தாரா டிரம்ப்?

image

அமெரிக்காவில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக நடைபெறும் வழக்கில் அதிபர் (தேர்வு) டிரம்புக்கு எதிராக வரும் 10ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நிதியில் இருந்து டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக நடந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதிபராக தேர்வாகியிருப்பதால் சிறை தண்டனை விதிக்கப்படாது என்று தெரிகிறது.

News January 4, 2025

மீண்டும் லாக்-டவுனா? நாடு தாங்காது அரசே!

image

சீனாவில் பரவும் HMPV வைரசால் ஆபத்து ஏதும் இல்லை என்று மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இதேபோல 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிப்பில்லை என்று அரசு கூறிய X போஸ்ட் வைரலாகி வருகிறது. ஆகையால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது. இன்னொரு லாக்-டவுனை நாடு தாங்காது இல்லையா?

News January 4, 2025

பும்ரா வராவிட்டால் என்ன ஆகும்?

image

காயம் காரணமாக கேப்டன் பும்ரா மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். ஒருவேளை அவரால் மீண்டும் வர முடியாவிட்டால் சப்ஸ்டிட்யூட் பிளேயரை வைத்து விளையாடலாம். ஆனால், சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பேட்டிங், பவுலிங் செய்ய முடியாது. பும்ரா திரும்பி வந்தால், அவர் எவ்வளவு மணி நேரம் வெளியே இருந்தாரோ, அவ்வளவு நேரத்திற்கு பவுலிங் போட முடியாது. இதனால், இந்திய அணி பாதிக்கப்படும்.

error: Content is protected !!