India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்களே கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இஷா குப்தா என்ற கொலையான மாணவருக்கும் சக மாணவர்களுக்கும் முன் பகை இருந்துள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்தபோது பகை தகராறாக மாறியிருக்கிறது. அதில், சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் இஷா குப்தா உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் ஜனவரி 10ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் MET கூறியுள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யவுள்ளது.
*மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்துப் பார்த்து செக் பண்ணவும் *திருட்டு ஃபோன் வாங்குவதை தவிர்க்க ஒரிஜினல் பில் கேட்கவும் *ஃபோனின் பாடி கண்டிஷன், ஸ்பீக்கர் கிரில், சிம்கார்ட் ஸ்லாட் & சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கவும் *டிஸ்ப்ளே ஸ்க்ரீன் ஒரிஜினலா, டேமேஜ் உள்ளதா எனப் பார்க்கவும் *சார்ஜிங் போர்ட், சிம் கார்டு ஸ்லாட்டை செக் செய்யவும். கால் செய்து, மைக் வேலை செய்வதையும் கன்ஃபர்ம் செய்யவும்.
இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த இவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே அத்தொகுதி MLA திருமகன் ஈவெரா இறந்தபோது அத்தொகுதி காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டு EVKS இளங்கோவன் தேர்வானார்.
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கின் FIRஇல் குறிப்பிடப்பட்ட ‘அந்த சார்?’ குறித்து விசாரணை நடப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். மாணவி வன்கொடுமை விவகாரத்தைப் போராட்டம் என்ற பெயரில் சிலர் அரசியலாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி விவகாரம் போல் இல்லாமல் இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டதால் தான் போராடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
*மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசுவது மென்காற்று
*மணிக்கு 6-11 கி.மீ வரை வீசுவது இளந்தென்றல்
*மணிக்கு 15-19 கி.மீ வரை வீசுவது தென்றல் காற்று *மணிக்கு 20-29 கி.மீ வரை வீசுவது புழுதிக் காற்று *மணிக்கு 30-39 கி. மீ வரை வீசுவது ஆடிக் காற்று *மணிக்கு 40-100 கி.மீ வரை வீசுவது கடும் காற்று *மணிக்கு 101-120 கி. மீ வரை வீசுவது புயல் காற்று *மணிக்கு 120 கி.மீ. மேல் வீசுவது சூறைக்காற்று
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கிவந்த சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, தலைமறைவான அதன் உரிமையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவில் பரவிவரும் HMPV வைரஸுக்கும் கொரொனாவுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன: *இரண்டுமே சுவாச மண்டலத்தை பாதித்து, லேசானது முதல் தீவிர தொற்றை ஏற்படுத்தும் *காற்றில் பரவும் *காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், வீஸிங், மூச்சுத்திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகள். *குழந்தைகள், முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகம் தாக்கும் *மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவை முக்கிய தடுப்பு முறைகளாகும்.
அண்ணாமலை ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை பத்திரிக்கையாளர் ’நக்கீரன்’ பிரகாஷ் முன் வைத்திருக்கிறார். திமுக அமைச்சர்களின் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் அது அமைச்சர்கள் செய்த ஊழல்தான் என்று அண்ணாமலை பேசி வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையின் மனைவி ₹70 கோடிக்கு சொத்து வாங்கிய ஆவணங்கள் வெளியாகியிருக்கிறது. இது அண்ணாமலையின் சொத்து இல்லையா என்று பிரகாஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி (ஜன.13, 20, 27), தாம்பரம் – கன்னியாகுமரி (ஜன.13), தாம்பரம் – ராமநாதபுரம் (ஜன.11, 13, 18), சென்னை <
Sorry, no posts matched your criteria.