India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 கேட்சுகளை பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக ஆஸி., அணியில் பாண்டிங் 191, மார்க் வாக் 181 கேட்ச் பிடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 36 சதம் அடித்துள்ள ஸ்மித், மேலும் 6 சதங்கள் அடித்தால் அதிக சதமடித்த ஆஸி., வீரர் என்ற சாதனையும் அவர் படைப்பார்.
பெங்களூருவில் ஆபிஸ் செல்ல ஓலா, ஊபர், ரேபிடோ கிடைக்காததால் ‘PORTER’ ஆப் மூலம் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்ட இளைஞரின் செயல் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை அள்ளுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூருவின் அவலத்தை இளைஞர் பதின் குகரே அம்பலப்படுத்தியுள்ளதாக ஒருசிலரும், ‘What an idea sirji’ என பாஸிட்டிவாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைப் பற்றி உங்க கருத்து என்ன?
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இதில், 40 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது. இந்த ஸ்கோருக்கு முக்கிய காரணமான ஜோ ரூட், 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். முன்னதாக, பென் டக்கெட் 65 எடுத்திருந்தார். தற்போது 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இங்கிலாந்து, இந்தியாவுக்கு பெரிய டார்கெட் கொடுக்கும் என்று தெரிகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மீன்கள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. இதனால், ஒரு கிலோ பெரிய வஞ்சிரம் – ₹700, சங்கரா – ₹300, கானாங்கத்த – ₹200, மத்தி – ₹150, நண்டு மற்றும் இறால் தலா ₹300க்கு விற்பனையாகிறது. தைப்பூசத்திற்கு பெரும்பாலான மக்கள் விரதம் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது. உங்கள் ஊரில் மீன் விலை என்ன?
டெல்லியில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட AIMIM கட்சி, அந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸை 4ஆம் இடத்துக்கு தள்ளியுள்ளது. ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் தொகுதிகளில் போட்டியிட்ட AIMIM கட்சி வேட்பாளர்கள் 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும், முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் AIMIM அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கட்சித் தாவிய 8 எம்.எல்.ஏக்களை மிகவும் அலட்சியமாக கையாண்டதே ஆம் ஆத்மி ஆட்சி கைநழுவக் காரணமாக அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வாக்குப்பதிவுக்கு 6 நாட்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தவர்களை கெஜ்ரிவால் ஏளனமாக பேசியதால் அவர்கள் பாஜகவுக்கு தீவிரமாக உழைத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் ஆட்சி நிலைத்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் மதுக்கூடங்கள், மது விடுதிகள் என்று அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
<<15407762>>பெண்கள் <<>>முன்னேறுவதற்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் பெற்றோர் தங்களின் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கற்று தரும் ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் பெற்றோர் அஞ்சும் நிலை உருவாகி விடும். எனவே, மாணவிகளுக்கு கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசின் கடமை.
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் 24ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினர். அதனை அவர் வெறும் 73 நொடிகளில் வீசி முடித்தது சாதனை படைத்துள்ளார். சராசரியாக ஒரு ஓவரை வீசுவதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். சில ஸ்பின்னர்கள் 3 நிமிடத்தில் கூட வீசுவர். முன்னதாக, டேரில் டஃபி 1 நிமிடம் 56 நொடிகளில் ஓவர் வீசியதே சாதனையாக இருந்தது.
சீமான் பெரியாரை மிக அநாகரிகமாக கொச்சைப்படுத்தியும் அதனை அதிமுக கண்டும் காணாமல் இருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், பாஜகவும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த வெறுப்பு அரசியலை வரவேற்றது என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் மறைமுக கூட்டணி உள்ளதோ என்று திருமா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.