news

News February 9, 2025

கொலுசு அணிவதன் நன்மைகள்

image

☆வெள்ளி, குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். ☆கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது. ☆குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. ☆இதனால் கோபம் & உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும்.

News February 9, 2025

விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி

image

2026 தேர்தலில் விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்று தவெக தெரிவித்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தவெக, இதுவரை யாருடனும் பேசவில்லை என்று விளக்கமளித்துள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தியவுடன் தேர்தல் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 9, 2025

கனடாவின் வளங்கள் மீது ட்ரம்புக்கு கண்: ஜஸ்டின் ட்ரூடோ

image

கனடாவின் இயற்கை வளங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என ட்ரம்ப் கூறுவது வேடிக்கையானது அல்ல என்றும், அவருக்கு அந்த சிந்தனை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கனடா வழியாக அகதிகளும், போதைப் பொருட்களும் அமெரிக்காவுக்கு வருவதாக ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 9, 2025

WTC: 2-ம் இடத்தில் தொடரும் ஆஸி.,

image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் 2-ம் இடத்தில் நீடிக்கிறது. பட்டியலில் தெ.ஆப்பிரிக்கா 69.44% புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸி.,(67.54%) 2-ம் இடத்திலும், இந்தியா(50.00%) 3-வது இடத்திலும் உள்ளன. வரும் ஜூன் மாதம் நடைபெறும் WTC இறுதிப்போட்டியில் ஆஸி., தெ.ஆப்பிரிக்கா மோதவுள்ளன.

News February 9, 2025

31 நக்சல்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் வெடி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போலீசாரும் உயிரிழந்தனர். நக்சல் இல்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 81 நக்சல்களும், கடந்த ஆண்டு 219 நக்சல்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

News February 9, 2025

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 54.81% ஆக உயர்வு

image

கடந்த பத்தாண்டுகளில் இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 54.81% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2013இல் 33.95 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பு, 2024 இல் 54.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் திறமையான நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு திறன் மேம்பாட்டு முயற்சிகளே இதற்கு காரணம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

News February 9, 2025

இந்திய அணிக்கு 305 ரன்கள் டார்கெட்

image

கட்டாக்கில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடியது. அவ்வணியின் பென் டக்கெட் 65 ரன்களும், ஜோ ரூட் 69 ரன்களும் எடுத்தனர். பின்னர், 49.5 ஓவர்களுக்கு 304 ரன்கள் எடுத்து ஆல் – அவுட் ஆனது. ஜட்டு அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

News February 9, 2025

தமிழர்களை வஞ்சிப்பது பாஜகவின் வழக்கம்: முதல்வர்

image

வஞ்சிப்பது பாஜகவின் வழக்கம், அதை எதிர்கொண்டு தமிழர்களை வாழ வைப்பது திமுகவின் வழக்கம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது என்பதால், அமைதியை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026இல் 200 தொகுதி இலக்கு என்பதை ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தொடங்கி வைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

மறைந்தது கருப்பின மக்களின் உரிமைக் குரல்

image

நமீபியாவின் தந்தை சாம் நியோயா(95) உடல்நலக்குறைவால் காலமானார். தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து நமீபியா விடுதலைக்காக வித்திட்ட அவர், அந்நாட்டு மக்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து கருப்பின மக்களின் சுதந்திரம், கல்வி உரிமைக்காகப் போராடிய சாம் நியோயாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 9, 2025

டெஸ்டில் அடுத்தடுத்து சாதனை படைக்கும் ஸ்டீவ் ஸ்மித்

image

டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 கேட்சுகளை பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக ஆஸி., அணியில் பாண்டிங் 191, மார்க் வாக் 181 கேட்ச் பிடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 36 சதம் அடித்துள்ள ஸ்மித், மேலும் 6 சதங்கள் அடித்தால் அதிக சதமடித்த ஆஸி., வீரர் என்ற சாதனையும் அவர் படைப்பார்.

error: Content is protected !!