India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்கள் பட்டியலில் 64.6 கோடி பயனர்களுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் நீடிக்கிறார். லியோனல் மெஸ்ஸி -50.5 கோடி, செலினா கோமஸ்- 42.2 கோடி, டுவைன் ஜான்சன்(ராக்)- 39.5 கோடி, கைலி ஜென்னர்- 39.4 கோடி, அரியானா கிராண்ட்- 37.6 கோடி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவில் விராட் கோலி- 27 கோடி முதலிடத்தில் உள்ளார்.
மாவட்டச் செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு அமைக்க தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்களை போல் செயல்படுவதாகவும், தவெகவில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல், பணம் வாங்கிக் கொண்டும், சாதி பார்த்தும் பதவி கொடுப்பதாகவும் தவெக நிர்வாகிகள் புகார் கூறியிருந்தனர். இந்நிலையில், எல்லை மீறும் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகையின் சமந்தாவின் சமீபத்திய போட்டோவில் பெரிதும் கவனம் ஈர்த்தது அவர் கையில் இருந்த வாட்ச் தான். Braceletல் நுணுக்கமான வெட்டப்பட்ட 425 வைரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 18 கேரட் வெள்ளை தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள வாட்சின் டையலிலும் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. இதன் விலை 1.3 கோடி வரை இருக்கலாம் எனப்படுகிறது. இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை ‘அடேங்கப்பா’ என வாயை பிளக்க வைத்துள்ளது.
திருப்பூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, பள்ளியில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது. ஆசிரியர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிருஷ்ணகிரி, திண்டிவனம் பள்ளிகளிலும் இதேபோல் புகார் எழுந்தது.
முதல் எண், இண்டஸ்ட்ரியை குறிக்கிறது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன், இவற்றில் எது என சொல்வது. அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. அதாவது, VISA, Mastercard, Maestro போன்ற கம்பெனியை விளக்குகிறது. 7-15 வரையிலான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது. கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.
மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம் என திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே பிரேன்சிங் பதவி விலகியுள்ளார் என்றார். மணிப்பூரில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட, இனியாவது பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்குடன் நடிகை பார்வதி நாயருக்கு சென்னை திருவான்மியூரில் திருமணம் நடந்துள்ளது. இவர்களது Wedding Receptionல் நெருங்கிய நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். நிமிர்ந்து நில் படத்தில் அறிமுகமான பார்வதி, கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
அடிக்கடி கையில் நெட்டி உடைக்கும் பழக்கம் இருந்தால், இனி உஷாராக இருங்கள். எலும்புகளுக்கு இடையே Synovial திரவத்தால் சிறு சிறு பபுள்கள் உருவாகி, எலும்புகள் உராயாமல் தடுக்கிறது. நாம் சொடுக்கு போடும் போது, இந்த பபுள் உடைந்து கீல்வாதத்திற்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடி வலிமையைப் பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். மூட்டுவலியும் ஏற்படலாம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும் என மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளதாகவும்,
இது குறித்த முறையான தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு மேலும் காலந்தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பனையூரில் TVK தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இவர் தவெகவுக்கு பணியாற்ற ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.