news

News January 4, 2025

பும்ரா நாளை விளையாடுவாரா?

image

முதுகுத் தசைப்பிடிப்பால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பும்ரா, நாளைய ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், நாளை அவரின் உடல்நிலையை பொறுத்தே, பவுலிங் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். ஒருவேளை, பும்ரா பவுலிங் செய்யவில்லை என்றால், அது IND அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

News January 4, 2025

உலகின் வயதான பெண்மணி உயிரிழந்தார்

image

உலகின் வயதான பெண்மணி என கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த, ஜப்பானின் டோமிகோ இடூகா (116) உயிரிழந்தார். கடந்த 2019 முதல் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த டிச.29ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். முதல் உலகப்போர் தொடங்குவதற்கு 6 ஆண்டுகள் முன்னதாக பிறந்து, 2 உலகப்போர்கள், கொரோனா மற்றும் டெக்னாலஜி புரட்சியை டோமிகோ கடந்து வந்துள்ளார்.

News January 4, 2025

HMPV வைரஸுக்கு காரணம் சீனாவா? அமெரிக்காவா?

image

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV வைரஸின் பாதிப்பு, மீண்டும் ஒரு பெருந்தொற்றா என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பு என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது. கொரோனாவுக்கு காரணமான கோவிட் வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதாக சொல்லப்பட்டாலும், அந்த ஆய்வகத்துக்கும் அமெரிக்கா தான் நிதியுதவி செய்ததாக தகவல் வெளியானது.

News January 4, 2025

பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

image

பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தமாகா தலைவருமான ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இடைத் தேர்தலின்போது வாக்குக்காக திமுக ரூ.3,000, ரூ.4,000, ரூ.5,000 வழங்குவதாக அவர் சாடியுள்ளார். அண்மையில் புயல், கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் பொங்கலை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.3,000 அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

News January 4, 2025

₹40 லட்சம் வருமானம் ஈட்டும் பானிபூரி வியாபாரி

image

தமிழ்நாட்டில் பானிபூரி வியாபாரி ஒருவர், 2023-2024ஆம் நிதி ஆண்டில் ₹40 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார். ஆன்லைன் பேமண்ட் மூலம் அவரது அக்கவுண்ட்டுக்கு சென்ற பணத்தை கணக்கிட்டு, அரசு இதை உறுதி செய்துள்ளது. அதனால், அவர் GST பதிவு செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. படித்ததற்கு வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் சுற்றி வரும் நிலையில், பானிபூரி வியாபாரியின் மாஸ்டர் மைண்ட் பற்றி உங்களது கமெண்ட் என்ன?

News January 4, 2025

இது நடந்தால் பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை

image

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட ஏதுவாக ஜன.17 கூடுதலாக ஒருநாள் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால், ஜன.14, 15, 16, 17, 18, 19 என 6 நாள் விடுமுறை வருகிறது. இந்த நிலையில், ஜன.13ஆம் தேதி திங்கட்கிழமையும் லீவ் அளித்தால், 9 நாள் ( ஜன.11 – 19 வரை) தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என எதிர்பார்கப்படுகிறது.

News January 4, 2025

“வந்தார்கள்…சென்றார்கள்”: ED குறித்து துரைமுருகன் கருத்து

image

அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “வந்தார்கள், ஒன்றுமில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்” என்றார். எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2025

ரிப்பீட் ஆகிறதா 2020?

image

2020-ஐ போலவே, 2025 புத்தாண்டும் புதிய வைரஸ் பற்றிய செய்தியுடன் தொடங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இரண்டு ஆண்டுகளின் புத்தாண்டு தினமும் புதன்கிழமை வந்ததை குறிப்பிடும் அவர்கள், கொரோனாவினால் எண்ணற்ற உயிர்களையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்தோம். ஆகவே, HMPV வைரஸ் இந்தியாவில் நுழைவதை தடுக்கும் வகையில் அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.

News January 4, 2025

சோனி, ஜீ குழும டி.வி. சேனல்கள் கட்டணம் அதிகரிப்பு

image

செட் டாப் பாக்ஸ் வந்தது முதல் கேபிள் டிவியில் சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிஸ் வைத்திருப்போருக்கும் இதே நிலைதான். இந்நிலையில் முக்கிய சேனல்களை தன்னகத்தை வைத்திருக்கும் சோனி குழுமம், ஜீ குழுமம் ஆகியவை பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் டிவி சேனல்கள் கட்டணத்தை 10%க்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனால் அந்த சேனல்களுக்கு இனி அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

News January 4, 2025

2026 தேர்தல்: அதிமுகவுக்காக களமிறங்கும் P.K.?

image

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தேர்தல் வியூக வேலை செய்தது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிறுவனம், அதிமுகவுக்காக தேர்தல் வியூக பணியை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவிடம் இருந்து மிகப் பெரியத் தொகையை ஐ-பேக் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!