news

News February 11, 2025

விஜய் மகன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

image

சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஷூட்டிங், சென்னையில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சந்தீப் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பைத் தொடங்க அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

News February 11, 2025

வேங்கை வயல் விவகாரத்தில் விசாரணை ஆணையம்: திருமா

image

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை சர்ச்சையானது. இந்நிலையில் வேங்கை வயல் வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் திருமா கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பட்டியல் சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News February 11, 2025

கம்பீர் செய்வது நியாயமல்ல: முன்னாள் கேப்டன்

image

கே.எல்.ராகுலை கம்பீர் ஓரங்கட்டுவதாக, முன்னாள் IND கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். மிடில் ஓவர்களில் Left – Right காம்பினேஷனுக்காக, 5ஆவது இடத்தில் இறங்க வேண்டிய ராகுலை, காலம் தாழ்த்தி இறக்குவதாகவும், இதனால் அவர் சொற்ப ரன்களில் அவுட் ஆவதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 5ஆவது இடத்தில் சிறப்பான ரெக்கார்ட் வைத்துள்ள ராகுலுக்கு, இது தன்னம்பிக்கையை சிதைக்கும் எனவும் கூறியுள்ளார்.

News February 11, 2025

தைப்பூசம் விரதத்தில் செய்ய வேண்டியவை என்ன?

image

பிப். 10 பிரதோஷ விரதம், பிப். 11 தைப்பூச விரதம், பிப். 12 பெளர்ணமி விரதம். இந்த 3 நாள்களுமே சிறப்பான நாள்கள் என்றாலும், இன்று காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ளலாம். காலையில் குளித்து முடித்து முருகனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். உபவாசம் இருக்கும் நேரத்தில் பால், பழங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். மாலை வரை விரதமிருந்து, கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

News February 11, 2025

INDIA கூட்டணி குறித்து உத்தவ் வேதனை

image

டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்க மோதிக் கொண்டதாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா விமர்சித்துள்ளது. இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டி, பாஜகவின் வெற்றியை எளிமையாக்கியதாகவும், 14 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங். பங்களித்ததாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் மட்டும் தான் INDIA கூட்டணியை காண முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளது.

News February 11, 2025

மகளிர் உரிமைத்தொகை.. அரசு முக்கிய முடிவு

image

பட்ஜெட் குறித்து CM ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுப்பட்ட குடும்ப தலைவிகளை இணைத்து, தகுதியான மகளிருக்கு ₹1000 வழங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

News February 11, 2025

நான் தனுஷுக்கு போட்டியா..? சிரித்த பிரதீப்

image

லுக்கும், Mannerismம் ஒரே மாதிரி இருக்கே என தனுஷுடன் பிரதீப் ரங்கநாதனை ஒப்பிட்டு பேசிவருகிறார்கள். போதாக்குறைக்கு வரும் 21ம் தேதி தனுஷ் இயக்கிய NEEK படமும், பிரதீப்பின் டிராகன் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. உடனே தனுஷுடன் போட்டி போடுகிறாரா? என்ற பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து பிரஸ் மீட்டில் பேசிய பிரதீப், எங்கேயும் போட்டி இல்லை. ரிலீஸ் டெட் அப்படி அமைந்து விட்டது சிரித்தபடியே கூறினார்.

News February 11, 2025

ஒரே நாளில் வெளிவரும் ஜனநாயகன், பராசக்தி?

image

துப்பாக்கியை கொடுத்தவரும், அதை வாங்கியவரின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா என்ற பேச்சு திடீரென எழுந்துள்ளது. அக்டோபருக்கு அறிவிக்கப்பட்ட விஜய்யின் படம், தற்போது 2026 பொங்கலில் வெளியாகும் எனப்படுகிறது. அதே நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பராசக்தி படமும், பொங்கல் தினத்தை குறிவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், SK மிகவும் கவனமாக படத்தை முன்கூட்டியே வெளியிட சொல்லிவிட்டராம்.

News February 11, 2025

இன்று டாஸ்மாக், இறைச்சி கடைகள் இயங்காது

image

வள்ளலார் நினைவு நாளையொட்டி வரும் 11ஆம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனுடன் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள், ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதேபோல், ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகளை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிப்பதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

எவ்வளவு நேரம் பல் துலக்கலாம்?

image

பல் துலக்குவதன் மூலம், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் வயிற்றுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு நேரம் பல் துலக்குவது என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதிக நேரம் பல் துலக்குவது, பல் எனாமலை பாதிக்கும். அதனால் 2 நிமிடம் பல் துலக்கினாலே போதுமானது. 3 மாதத்திற்கு ஒருமுறை பிரஷ்-ஐ மாற்ற வேண்டும். பிரஷ் நிறைய பேஸ்ட் தேவையில்லை. ஒரு பட்டாணி அளவான பேஸ்ட் போதுமானது. நீங்க எப்படி?

error: Content is protected !!